ஹோம் /விருதுநகர் /

வட்டி இல்லாமல் பயிர் கடன் பெறலாம்.. விருதுநகர் மாவட்ட விவசாயிகளே இதுதான் வழிமுறை..

வட்டி இல்லாமல் பயிர் கடன் பெறலாம்.. விருதுநகர் மாவட்ட விவசாயிகளே இதுதான் வழிமுறை..

வட்டி இல்லா கடன்

வட்டி இல்லா கடன்

Virudhunagar District News | விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் வட்டி இல்லாமல் பயிர் கடன் பெற  உடனடியாக விண்ணப்பிக்கலாம் என்று கூட்டுறவு சங்கத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்  “விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் தகுதியுள்ள விவசாயிகளுக்கு நடப்பு ஆண்டில் ரூ.200 கோடி வரை பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,972 விவசாய உறுப்பினர்கள் ரூ.58.06 கோடி பயிர்க்கடன் பெற்றுள்ளனர்.

விவசாயிகள் அனைவரும் அருகில்‌ உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிர்க்கடன் கோரி விண்ணப்பிக்கலாம். கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் கடந்தாண்டு 20,353 உறுப்பினர்களுக்கு ரூ.135.51 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் 3,420 புதிய உறுப்பினர்கள் ரூ.23.07 கோடிக்கு பயிர்க்கடன் பெற்றுள்ளனர். நடப்பு ஆண்டில் மாநில தொழில்நுட்ப குழுவினரால் நிர்ணயம் செய்யப்பட்ட 2022-23 ஆண்டு பயிர்க்கடன் அளவு திட்டத்தின்படி அருகில் உள்ள சங்கங்களில் அனைத்து விவசாயிகளும் கடன் பெறலாம்.

6 முதல் 15 மாதங்களுக்கு உட்பட்டு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் கே.சி.சி. குறுகிய கால பயிர் கடன்களை உரிய ஆவணங்களுடன் நபர் ஜாமீன் அல்லது தங்க நகை அடமானத்தின் பேரில், அதிகபட்சமாக ரூ.1.60 லட்சம் வரையிலும், தங்க நகை அடமானத்தின் பேரில் அல்லது சாகுபடி நில அடமானத்தின் பேரில் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரையிலும் அனைத்து சங்கங்களிலும் வட்டியில்லா பயிர்க்கடன் பெறலாம்.உரிய தவணை தேதிக்குள் கடனை திருப்பி செலுத்தினால் வட்டி செலுத்த தேவையில்லை.

இதன்படி ஏக்கர் ஒன்றுக்கு பயிர்க்கடன் நிலவரம்.

 வ.எண்பயிர்கள்  பயிர்க்கடன்  (  1 ஏக்கருக்கு)
1நெல் (பாசனம்/மானாவாரி)ரூ.26,100
2மக்காச்சோளம் (பாசனம்)ரூ.28,750
3மக்காச்சோளம் (மானாவாரி)ரூ.19,200
4பருத்தி (பாசனம்)ரூ.26,350
5பருத்தி (மானாவாரி)ரூ.17,550
6மிளகாய் (பாசனம்)ரூ.26,950
7மிளகாய் (மானாவாரி)ரூ.20,250
8தென்னை (பராமரிப்பு)ரூ.25,450
9நிலக்கடலை (பாசனம்)ரூ.24,900
10நிலக்கடலை (மானாவாரி)ரூ.20,200

விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை கீழ்க்காணும் ஆவணங்களுடன் அணுகி கடன் பெற்று பயன் அடையலாம்.

இதையும் படிங்க : விருதுநகர் ரயில் நிலையத்திற்கு வருகிறது 'ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடெக்ட்' அங்காடி - என்ன விற்பனை தெரியுமா?

கடன் பெற தேவையான ஆவணங்கள் : 

  • கடன் தேவையுள்ள விவசாயிகள் பயிர்க்கடன் பெறுவதற்கு கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் பயிர் அடங்கல்,
  • 10(1) சிட்டா,
  • ஆதார் அட்டை நகல்,
  • குடும்ப அட்டை நகல்
  • பாஸ்போர்ட் அளவு உள்ள 2 புகைப்படம்

இவற்றை கொண்டு அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நேரில் விண்ணப்பித்து பயிர்க்கடன் பெறலாம்.

இதுவரை பயிர்க்கடன் பெறாத விவசாயிகள் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உரிய பங்குத் தொகை மற்றும் நுழைவு கட்டணம் செலுத்தி புதிய உறுப்பினர்களாக சேர்ந்து பயிர்க்கடன் பெறலாம்.

விருதுநகர் மாவட்டத்தின் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் போதிய உரம் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு ரொக்கமாகவும், கடன் அடிப்படையிலும் வழங்கப்பட்டு வருகிறது.

கூடுதல் விபரங்களுக்கு விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முதன்மை வருவாய் அலுவலர்-94899 27003,

பொது மேலாளர்-94899 27001,

உதவி பொது மேலாளர்-94899 27006,

மேலாளர் (விவசாயம்) 94899 27177,

களமேலாளர் (விருதுநகர்)-94899 27044,

களமேலாளர் (ஸ்ரீவில்லிபுத்தூர்) 94899 27021,

களமேலாளர் (அருப்புக்கோட்டை)-94899 27023 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Published by:Ramprasath H
First published:

Tags: Farmers, Loan, Local News, Virudhunagar