ஹோம் /விருதுநகர் /

வெறிச்சோடும் உழவர் சந்தை.. விருதுநகரில் விவசாயிகளிடையே வரவேற்பு குறைய என்ன காரணம்?

வெறிச்சோடும் உழவர் சந்தை.. விருதுநகரில் விவசாயிகளிடையே வரவேற்பு குறைய என்ன காரணம்?

உழவர்

உழவர் சந்தை

Virudhunagar Uzhavar Sandhai | இந்த உழவர் சந்தைகளில் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைத்தால் மக்களும் ஆர்வத்துடன் வந்து சென்றனர்.ஆனால் நாளடைவில் சந்தைக்கு விவசாயிகள் வருகை குறைந்தால், கடைகளின் எண்ணிக்கையும் குறைந்தன. 

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் குறைந்த அளவிலேயே காய்கறி கடைகள் செயல்பட்டு வருவதால், மக்கள் வெளி மார்க்கெட்டுகளில் காய்கறிகளை அதிக விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக  கூறப்படுகிறது. இந்த நிலையில் விருதுநகரில் உள்ள உழவர் சந்தைக்கு நேரில் சென்று ஆய்வு செய்த போது உழவர் சந்தைக்கு குறைவான கடைகள் இருப்பதற்கான காரணங்கள் தெரியவந்துள்ளன.

உழவர் சந்தை:

காய்கறிகள் மற்றும் பழங்களை பயிரிடும் விவசாயிகள் இடைத்தரகர்கள் இன்றி மக்களிடமே நேரடியாக தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையில், உழவர் சந்தை திட்டத்தை தமிழக அரசு ஏற்படுத்தியது. அதன்படி தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் உழவர் சந்தைகள் ஏற்படுத்தப்பட்டன.

மேலும் படிக்க: புளியஞ்சோலை வனப்பகுதிக்கு சுற்றுலா செல்ல திட்டமா?  

இத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் சந்தையில் தனி இடம் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு இலவச எடை கருவிகளும் வழங்கப்பட்டன. மேலும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களை விளைநிலத்திலிருந்து பொருட்களை சந்தைக்கு எடுத்து வர ஏதுவாக அரசு பேருந்துகளில் சுமை கட்டணம் இன்றி எடுத்து வரும் வசதியும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டது.

மேலும் இந்த உழவர் சந்தைகளில் காய்கறிகள் குறைந்த விலையில் கிடைத்ததால் மக்களும் ஆர்வத்துடன் வந்து சென்றனர்.

ஆனால் நாளடைவில் சந்தைக்கு விவசாயிகள் வருகை குறைந்ததால், கடைகளின் எண்ணிக்கையும் குறைந்தன.

மேலும் படிக்க:  சிவகங்கை சீமையை ஆண்ட மருதுபாண்டியர்களின் பூர்வீக கிராமம்.. முக்குளத்துக்கு ஒரு விசிட்..

தற்போது குறைந்த அளவிலே கடைகள் செயல்பட்டு வருவதால் மக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக விவசாயிகள் யாரும் உழவர் சந்தைகளில் கடை வைக்க முன் வராததே என்று கூறப்படுகிறது. தனிப்பட்ட வேலைப் பளு காரணமாக விவசாயிகளால் உழவர் சந்தைக்கு வந்து காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத காரணத்தால் விவசாயிகள் காய்கறிகளை இடைத்தரகர்களிடமே விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

உழவர் சந்தை

இந்த நிலையில் விருதுநகர் உழவர் சந்தை சார்பில் , காய்கறிகளை ஆன்லைன் மூலம் டோர் டெலிவரி செய்து அதன் மூலம் உழவர் சந்தையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்கான காய்கறிகள் சந்தைக்கு வர முடியாத விவசாயிகளிடம் இருந்து பெறப்பட்டு டெலிவரி செய்யப்படுகின்றன.

வெறிச்சோடும் உழவர் சந்தைகள்..

மேலும் படிக்க:  மருது பாண்டியர்கள் குல தெய்வமாக வழிபட்டுவந்த தீ பாய்ந்த அம்மன் கோயில் பற்றி தெரியுமா?

இது குறித்து பேசிய அதிகாரி ஒருவர், நிறைய சலுகைகள் வழங்கியும் விவசாயிகள் அவர்களின் வேலைப்பளு காரணமாக சந்தையில் கடை வைக்க முன்வரவில்லை, அதனால் தான் இப்போது டோர் டெலிவரி செய்து வருவதாக கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தற்போதைய சுழலில் விவசாயிகள் மட்டும் உழவர் சந்தையில் அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், சிறுவியாபாரிகளையும் அனுமதிக்கும் பட்சத்தில் சந்தைக்கு வர முடியாத விவசாயிகள் இவர்களிடம் காய்கறிகளை விற்பனை செய்வதன் மூலம் உழவர் சந்தை திட்டத்தை மேம்படுத்த முடியும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள் மேலும் அவர்கள் அரசாங்கம் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்‌.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar