ஹோம் /விருதுநகர் /

விருதுநகர்ல இருந்து அமெரிக்காவுக்கு பறக்கும் பொரிச்ச பரோட்டா.. இதை சாப்பிட்டிருக்கீங்களா?

விருதுநகர்ல இருந்து அமெரிக்காவுக்கு பறக்கும் பொரிச்ச பரோட்டா.. இதை சாப்பிட்டிருக்கீங்களா?

விருதுநகர்

விருதுநகர் பொரிச்ச பரோட்டா.

Virudhunagar Poricha Parotta | விருதுநகர் பல்வேறு விஷயங்களுக்கு பிரபலமாக இருந்தாலும் அங்கு கிடைக்கும் பொரிச்ச பரோட்டாவுக்கு எப்போதும் தனிமவுசு உண்டு.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அந்த ஊரின் பெயரை சொன்னாலே நமக்கு முதலில் அந்த சிறப்பு தான் நினைவுக்கு வரும்.

மதுரை என்றாலே நினைவுக்கு வருவது மல்லிகை, அது போல திருநெல்வேலிக்கு அல்வா, திண்டுக்கல் என்றால் பூட்டு என்று அந்தந்த ஊரின் பெயரை சொன்னாலே அந்த ஊருக்கென பிரபலமாக திகழும் பொருட்கள் நம் நினைவுக்கு வரும்.

சரி இப்படி எல்லா ஊருக்கும் ஒரு சிறப்பு உள்ளது. விருதுநகருக்கு என சிறப்பு உள்ளது என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மனதில் எழுந்திருக்கும்.

வேறென்ன விருதுநகர் மக்கள் விரும்பும் புரோட்டா தான். விருதுநகரில் இந்த பெயரை சொன்னாலே முதலில் அனைவரின் நினைவுக்கு வருவது இங்கு கிடைக்கும் பொரிச்ச புரோட்டா தான்.

மேலும் படிக்க:  மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் இத்தனை சூப்பர் ஹிட் சினிமா காட்சிகளை எடுத்துள்ளார்களா?

புரோட்டால என்ன இருக்கு எல்லா ஊருலயும் தான் கிடைக்குதுனு நீங்க நினைக்கலாம். ஆனால் விருதுநகரில் கிடைக்கும் பொரிச்ச புரோட்டாவின் சுவைக்கு வேறு எந்த ஊர் பரோட்டாவும் ஈடு ஆகாது என்பது தான் உண்மை. இது விருதுநகர் புரோட்டா சாப்பிட்டவர்களுக்கே புரியும்.

விருதுநகர் பொரிச்ச புரோட்டா

புரோட்டாவில் பல வகை உண்டு. அதில் ஒன்று தான் இந்த பொரிச்ச புரோட்டா என்று சொல்லப்படும் எண்ணெயில் பொரித்தெடுக்கப்படும் புரோட்டா. இந்த புரோட்டா முதன் முதலில் அறிமுகம் செய்யப்பட்டது விருதுநகரில் தான் என்று கூறப்படுகிறது. எண்ணெயில் பொரித்த புரோட்டாவை பிச்சு போட்டு சால்னாவை ஊத்தி ஊற வைச்சு சாப்பிடும் போது கிடைக்கும் சுவை இருக்கே.. அது சாப்பிட்டவர்களுக்கு மட்டுமே தெரியும்.

மேலும் படிக்க:  மராட்டிய மன்னர் மனதை கவர்ந்த தஞ்சை ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்புகள் தெரியுமா?

புரோட்டா என்றால் விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அசன் ஹோட்டலை மறந்து விட முடியாது. ஏனென்றால் பொரிச்ச புரோட்டா அறிமுகம் செய்யப்பட்டதே இங்கு தான் என்று கூறுவார்கள் உள்ளூர்காரர்கள். மூன்று தலைமுறைகளாக செயல்பட்டு வரும் இந்த உணவகத்தில் தயாரிக்கப்படும் புரோட்டாவிற்கு ரசிகர்கள் ஏராளம்.

இது குறித்து பேசிய, அசன் ஹோட்டல் சபீர் ரகுமான் தனது தாத்தா தான் முதன் முதலில் விருதுநகரில் பொரிச்ச புரோட்டாவை அறிமுகம் செய்ததாகவும் மக்களுக்கு அது பிடித்து போனது. இன்றும் நல்ல வரவேற்பு உள்ளது என்று கூறினார்.

இந்த பரோட்டா இவ்வளவு புகழ் பெற காரணம் அதற்கு கொடுக்கப்படும் சால்னா தான். புரோட்டாவை பிச்சு போட்டு சால்னாவை ஊத்தி ஊற வைத்து சாப்பிட்டால் நாம் அதற்கு அடிமையாகி விடுவோம் என்கிறார். சமீபத்தில் கூட தனது தந்தையின் நண்பர் பரோட்டாவை இங்கு வாங்கி அமெரிக்காவில் வசிக்கும் தனது குடும்பத்திற்கு கொண்டு சென்றதாக கூறினார்.

தினசரி மதியம் இரண்டு மணியில் இருந்து இரவு வரை நடக்கும் பரோட்டா விற்பனை மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஹோட்டல் மட்டும் அல்ல திருமணம் போன்ற வைபவங்களுக்கு மொத்தமாக புரோட்டா செய்து தருவதாகவும் கூறினார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

பரோட்டா மொத்தமாக ஆர்டர் செய்ய 94427 17868 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று சபீர் ரகுமான் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar