முகப்பு /விருதுநகர் /

பொம்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள்.. அனுபவங்களை பகிரும் பொம்மை மனிதர்கள்!

பொம்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் முகங்கள்.. அனுபவங்களை பகிரும் பொம்மை மனிதர்கள்!

X
பொம்மை

பொம்மை மனிதர்கள்

Viruthunagar News| வேலையில் கஷ்டம் என்றால் முகமூடியை கழற்றாமல் இருக்க வேண்டும் இதனால் அதிகமாக வியர்க்கும், வேடத்தை கலைத்து விட்டு வீட்டுக்கு போய் படுத்தாலும் எளிதில் தூக்கம் வராது - பொம்மை மனிதர்கள்

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் கே.வி.எஸ் பள்ளி மைதானத்தில் 75வது பொருட்காட்சி நடைபெற்று வரும் நிலையில், பொருட்காட்சியின் மக்கள் கூட்டத்தை டோரிமோன், மிக்கி மவுஸ், சோட்டா பீம் போன்ற கதாபாத்திர வேடமிட்ட பொம்மை மனிதர்கள் மக்களை வரவேற்று கொண்டிருந்தனர். மக்களும் அவர்களோடு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் போது பொம்மை மனிதர்கள் அவ்வப்போது வெளியில் சென்ற படி இருந்தனர்.

அவர்களை பின் தொடர்ந்து சென்று பார்த்த போது உடல் முழுவதும் மூடி இருப்பதால் வியர்த்து சற்று ஓய்வெடுக்க அங்கு வந்திருந்தனர் என்பதை புரிந்து கொள்ள முடிந்தது. வியர்த்த முகத்துடன் நம்மிடம் பேச தொடங்கிய குல்லூர் சந்தையை சேர்ந்த வீரபாண்டி ”தான் டிப்ளோமா படித்து விட்டு தற்போது இது போன்று கிடைத்த வேலைகளை செய்து வருவதாக தெரிவித்தார்.

வேலையை பற்றி பேச தொடங்கியவர், வேலையில் கஷ்டம் என்றால் முகமூடியை கழற்றாமல் அப்படியே இருக்க வேண்டும். இதனால் அதிகமாக வியர்க்கும் வேடத்தை கலைத்து விட்டு வீட்டுக்கு போய் படுத்தாலும் அவ்வளவு எளிதில் தூக்கம் வராது மற்றபடி பெரிதாக கஷ்டம் என்று ஒன்றுமில்லை, சிலர் மது போதையில் தவறாக நடந்து கொள்வர் அவர்களுக்கு புரிய வைப்பது தான் கஷ்டமாக இருக்கும்” என்றார்.

இது பற்றி கல்லூரி மாணவரான இன்னொருவரிடம் பேசிய போது, ”குடும்ப சுழல் காரணமாக கல்லூரி சென்று கொண்டே இந்த வேலை செய்து வருவதாகவும், என்னுடைய நண்பர்கள் எல்லாம் நல்ல ஆடை அணிந்து வரும் போது நான் இது போன்று பொம்மை வேடம் போட்டு வருவதை ஒரு நாளும் நான் அவமானமாக நினைத்ததில்லை” நேர்மையாக சம்பாதிக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் இருக்கும் கர்வம் இதுதான் என்பதை புரிந்துக்கொண்டோம்.

வேடம் போட்டு இருக்கும் போது தாங்க முடியாத அளவுக்கு வெப்பநிலை இருக்கும் அதனால் வியர்த்துக் கொண்டே இருக்கும். அதெல்லாம் வெளிக்காட்டாமல் தான் வரும் பொதுமக்களை சிரிக்க வைக்க இதை செய்து வருவதாக தெரிவித்தவர்கள் சொல்லப்போனால் முகமூடியை மாட்டி விட்டால் அருகில் இருப்பவரை கூட அடையாளம் காண முடியாது எல்லாவற்றையும் ஒரு யூகத்தின் அடிப்படையில் புரிந்து கொண்டு தான் செயல்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதையும் படிங்க | வந்துவிட்டது சம்மர்.. "இப்படி தான் இருக்கனும்" எச்சரிக்கும் விருதுநகர் மருத்துவர்!

ஒருசிலர் அறியாமல் தங்களுக்கு தொந்தரவு தந்தாலும், யாரோ ஒருவரின் மகிழ்ச்சிக்கு நாம் காரணமாக இருக்கிறோம் என்ற திருப்தி கிடைப்பதால் இதை விரும்பி செய்து வருவதாக தெரிவிக்கின்றனர் இந்த பொம்மை மனிதர்கள்.

நாமும் திருமண வீடு, கோவில் திருவிழா என எத்தனையோ இடங்களில் இது போன்ற பொம்மை மனிதர்களை பார்த்திருப்போம், அவர்களோடு புகைப்படங்கள் எடுத்திருப்போம். வெறும் பொம்மை முகங்களை மட்டும் பார்த்து ரசிக்கும் நாம் அதற்குள் இருக்கும் முகங்களை பார்பது இல்லை! என்பதுதான் நிதர்சனம்.

First published:

Tags: Local News, Virudhunagar