ஹோம் /விருதுநகர் /

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருள்கள்.. ராஜபாளையத்தில் நடைபெற்ற அசத்தல் கண்காட்சி! 

பிளாஸ்டிக் பொருட்களுக்கான மாற்று பொருள்கள்.. ராஜபாளையத்தில் நடைபெற்ற அசத்தல் கண்காட்சி! 

X
ராஜபாளையம்

ராஜபாளையம்

Virudhunagar District News : உலக மண் தினத்தை முன்னிட்டு ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

உலக மண் தினத்தை முன்னிட்டு ராஜபாளையத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்று பொருள்கள் குறித்த கண்காட்சி நடைபெற்றது.

இன்று (டிசம்பர் 5ம் தேதி) உலக மண் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராஜபாளையம் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருள்கள் குறித்த கண்காட்சி நடைபெற்று வருகிறது.

அதன்படி கடந்த 3ம் தேதி ராஜபாளையத்தில் உள்ள காந்தி கலை மன்றத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக புதியதாக வந்துள்ள மாற்றுப் பொருள்கள் குறித்த கண்காட்சி தொடங்கியது.

இதையும் படிங்க : விருதுநகரில் பிரதோஷம், பௌர்ணமியை முன்னிட்டு சதுரகிரி மலையேற அனுமதி.. பக்தர்கள் உற்சாகம்..!

இக்கண்காட்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களுக்கு மாற்றாக பயன்படுத்த கூடிய பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளில் செய்யப்பட்ட கைவினை பொருள்கள் பொதுமக்கள் பார்வைக்கு காட்சி படுத்தப்பட்டன.

குறிப்பாக உணவகங்களில் பார்சல் செய்ய பயன்படுத்தும் வகையில் கரும்பு சக்கை மற்றும் மக்கா சோள கழிவுகளில் செய்யப்பட்ட கப்புகள் , பேக்கிங் கவர்கள் இடம் பெற்றன.

தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெற உள்ள நிகழ்வு குறித்து பேசிய ராஜபாளையம் நகராட்சி ஆணையர், “பொதுமக்கள் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமைகளை பற்றி நன்கு அறிந்திருந்தும், ஆனாலும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக எதை பயன்படுத்துவது என்பதில் தெளிவில்லாமல் உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதனால் தான் பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றாக வேறென்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பது குறித்த இக்கண்காட்சி தொடங்கப்பட்டுள்ளது” என்றார். மேலும், இக்காட்சி இன்றுடன் (டிசம்பர் 5) நிறைவடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar