முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் உயர்கல்வி குறித்து வழிகாட்டுதல் நிகழ்வு- ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

விருதுநகரில் உயர்கல்வி குறித்து வழிகாட்டுதல் நிகழ்வு- ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

X
வழிகாட்டு

வழிகாட்டு நிகழ்வில் மாணவர்கள்

Virudhunagar | விருதுநகரில் பள்ளி மாணவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள் சார்பில் உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரை சேர்ந்த தன்னார்வ அமைப்பான ஏஎன்டி அறக்கட்டளை விருதுநகரில் கல்வி, மருத்துவம் மற்றும் சமூகம் சார்ந்த சேவைகளில் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில் விருதுநகரில் சமூக சேவை செய்து வரும் மற்றொரு அமைப்பான விருதுநகர் ஜேசிஐ அமைப்பினருடன் சேர்ந்து பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டி நிகழ்வு ஒன்றை நடத்தினர்.

கடந்த 10ம் தேதி விருதுநகர் கேவிஎஸ் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்வில், உயிரியல் பாடப்பிரிவு மாணவர்களுக்கு ஏஎன்டி அமைப்பின் தலைவரும், திருவனந்தபுரம் மருந்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர். ஜெயராஜ் சேகர் மருத்துவ துறையில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்து விளக்கினார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் மருத்துவத்தில் உள்ள பல்வேறு பாடப்பிரிவுகள் குறித்து விளக்கும் விளக்க பதாகை ஒன்றையும் திறந்து வைத்தனர்.

இது குறித்து பேசிய மாணவர்கள், ’இந்நிகழ்வு மூலம் மருத்துவம் என்றாலே மருத்துவர் தான் என்றிருந்த தாங்கள் மருத்துவ துறையில் உள்ள பல்வேறு வாய்ப்புகள் குறித்து தெரிந்து கொண்டதாகவும், இதன் மூலம் தங்களுக்கு தேவையான படிப்பை சிந்தித்து தேர்ந்தெடுக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

First published:

Tags: Local News, Virudhunagar