விருதுநகர் மிளகாய் வத்தல் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் கடந்த 17.11.2022 புதன் கிழமை அன்று Indian oil corporation மற்றும் Artificial Limbs Manufacturing Corporation சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு ட்ரை சைக்கிள், வீல் சேர் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் மாநில வருவாய் துறை அமைச்சர் ராமசந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
விழாவில் பேசிய ஆட்சியர் மேகநாத ரெட்டி மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க : வீழ்ச்சியடைந்த கொய்யா விலை.. வேதனையில் மரத்தை எரிக்கும் விருதுநகர் விவசாயிகள்..!
விழாவில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பயனாளிகளுக்கு உபகரணங்கள் வழங்கினார்.
மொத்தமாக 399 பயனாளிகளுக்கு ட்ரை சைக்கிள், வீல் சேர், ஸ்மார்ட் போன் உட்பட 925 உபகரணங்கள் வழங்கப்பட்டன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar