முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் அருகே யானை உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய மக்கள்!..

விருதுநகர் அருகே யானை உயிரிழப்பு... சோகத்தில் மூழ்கிய மக்கள்!..

X
உயிரிழந்த

உயிரிழந்த யானைக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்

Virudhunagar Elephant Dead News | கடந்த 75 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யானை நேற்று  காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

  • Last Updated :
  • Virudhunagar, India

உடல் நலக்குறைவு காரணமாக விருதுநகரில் சிகிச்சை பெற்று வந்த லலிதா என்கிற பெண் யானை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் ஷேக் முகமது என்பவர், லலிதா என்கிற 65 வயதான பெண் யானையை வளர்த்து வந்தார்‌. கோவில் திருவிழா போன்ற விஷேசங்களுக்கு பயன்படுத்தி வந்த இந்த யானையை வயது மூப்பு காரணமாக இனி எந்த வேலைக்கும் உட்படுத்த கூடாது என ஏற்கனவே வனத்துறை இவருக்கு அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

ஆனால்,யானையை விஷேங்களுக்கு அனுப்பி வந்த நிலையில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு விருதுநகர் பெருமாள் கோயில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிக்காக யானை வந்திருந்த போது , எதிர்பாரா விதமாக கீழே விழுந்து யானைக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தகவலறிந்து உடனடியாக அங்கே வந்து, யானையை மீட்ட வனத்துறையினர் கால்நடை பராமரிப்பு துறை உதவியோடு விருதுநகர் முத்துமாரியம்மன் கோயில் வளாகத்தில் வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.

75 நாட்கள் சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் யானை நேற்று  காலை 6 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம்   விருதுநகர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், மக்கள் பலர் நேரில் வந்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் யானை விருதுநகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள இடிகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

First published:

Tags: Local News, Virudhunagar