ஹோம் /விருதுநகர் /

விருதுநகரிலுள்ள 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால குடைவரை கோவில்- வரலாறு தெரியுமா?

விருதுநகரிலுள்ள 8-ம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால குடைவரை கோவில்- வரலாறு தெரியுமா?

குடைவரை

குடைவரை கோவில்

Virudhunagar | விருதுநகர் மாவட்டத்தில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பாண்டியர் கால சிவாலயம் பல்வேறு சிறப்புகளைக் கொண்டது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Srivilliputhur, India

விருதுநகர் மாவட்டத்தில் எட்டாம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான பாண்டியர் கால சிவாலயம் ஒன்று உள்ளது. விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ளது மூவரை வென்றான் எனும் அழகிய கிராமம். இக்கிராமம் மிக நீண்ட வரலாற்று பின்னணி கொண்டது. இவ்வூரில் இருக்கும் மலையில் தான் இந்த பழமையான சிவன் கோவில் உள்ளது.

கோவில் அமைப்பு:

இந்த கோவில் ஓர் மலையை குடைந்து கட்டப்பட்ட குடைவரை கோயில். கருவரையினுள் உள்ள சிவலிங்கம் தாய் பாறையினால் செதுக்கப்பட்டு உள்ளது. வெளிப்புறத்தில் விநாயகர், முருகன், நடராஜர் புடைப்பு சிற்பங்கள் காணப்படுகின்றன.

குடைவரை கோவில்

இவை தவிர வெளியில் மரகதவல்லி தாயார், காலபைரவர் சன்னதிகள் உள்ளன. இந்த மொட்ட மலையின் மேல் பக்கம் ஒரு பகுதியில் முருகன் கோவிலும் மற்றொரு பகுதியில் கார்த்திகை தீபம் ஏற்றும் கம்பமும் உள்ளது.

குடைவரை கோவில் சிலை

நீர் மேலாண்மை:

கோயிலின் நீர்த்தேவைக்கு இந்த மலையின் மற்றொரு புறத்தில் சுனை ஒன்று உள்ளது. அங்கிருந்து நீரை மலைக்கு கீழ்புறத்தில் உள்ள கோவிலுக்கு எடுத்து வர மலைகளை வெட்டி வாய்க்கால் அமைத்துள்ளனர். இன்றும் இது தான் கோவிலின் நீர் தேவையை பூர்த்தி செய்து வருகிறது.

குடைவரை கோவில்

கோவில் வரலாறு:

இந்த கோவில் எட்டாம் நூற்றாண்டில் பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டது. இந்த கோவில் யாருடைய ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது என்பது பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை. சமீபத்தில் தான் இங்கு தொல்லியல் துறையினர் வந்து இங்குள்ள கல்வெட்டுகளை படியெடுத்து சென்றதாக இந்த ஊர் மக்கள் தெரிவித்தனர்.

சிவன் சிலை

மூலவராக உள்ள சிவலிங்கம் சதுர ஆவுடை வடிவில் இருப்பதை வைத்து இது ஓர் பாண்டியர் கால சிவாலயம் என்பதை புரிந்து கொள்ளலாம். ( சோழர்கள், பல்லவர்கள் வட்ட வடிவில் ஆவுடை அமைக்கும் பழக்கம் கொண்டவர்கள்)

கோவிலுக்கான கூகுள் மேப்

பேருந்து வசதி:

ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மூவரை வென்றான் விலக்கு நிறுத்தத்திற்கு விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் பேருந்துகள் நிறைய உள்ளன. அந்த நிறுத்தத்தில் இருந்து உள்ளே நான்கு கிலோமீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். (சொந்த வாகனத்தில் வருவது சிறப்பு)

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar