ஹோம் /விருதுநகர் /

சிவகாசியில் கல்வி மேளா.. கலை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்..

சிவகாசியில் கல்வி மேளா.. கலை நிகழ்ச்சிகளில் உற்சாகமாக பங்கேற்ற மாணவர்கள்..

சிவகாசி

சிவகாசி

Sivakasi Latest News | சிவாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான Right club for education அமைப்பினர் மாணவர்களுக்கு குறைந்த கட்டணமாக 5 ரூபாய்க்கு பாடசாலை நடந்தி வருகின்றனர்.

  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India

மறைந்த குடியரசு தலைவர், ஏவுகணை நாயகன் திரு ஏபிஜே அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளையொட்டி, விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்ற கல்வி மேளா நடைபெற்றது.

சிவாசியை சேர்ந்த தன்னார்வ அமைப்பான Right club for education அமைப்பினர் மாணவர்களுக்கு குறைந்த கட்டணமாக 5 ரூபாய்க்கு பாடசாலை நடந்தி வருகின்றனர். இதில் மாணவர்களுக்கு டியூசன் எடுப்பது மற்றும் அவர்களின் திறமைகளை வெளிப்படுத்த சிலம்பம், நடனம் முதலான பயிற்சிகளையும் அளித்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 அன்று கல்வி மேளா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.

மேலும் படிக்க: திருச்சியில் குறைந்த செலவில் மகிழ்ச்சி நிறைந்த மலை சுற்றுலா - இங்கு இத்தனை அருவிகள் இருக்கா..!

மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர நாடகம், மைம் ஷோ முதலான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாடகங்களில் சுற்றுச்சுழல் பாதுகாப்பு விழிப்புணர்வு, திருநங்கை பாலின சமத்துவம், மொபைல் போன் நன்மை தீமைகள் தொடர்பாக மாணவர் நிகழ்த்தி நாடகங்கள் பார்வையாளர்கள் கவனத்தை ஈர்த்தது.இதில் மாணவர்கள் கலந்து கொண்ட மாணவர்கள் இது தங்களின் திறமையை வெளிப்படுத்த கிடைத்த ஒரு வாய்ப்பு என்றும் இந்த வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த, RCE க்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது தொடர்பாக RCE vice president அருண் குமார் பேசுகையில் தாங்கள் அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி மேளா எனும் பெயரில் கலை நிகழ்ச்சி நடத்தி வருவதாகவும், இனி வரும் காலங்களில் இது போன்ற மாணவர்கள் திறமை வெளிபடுத்தும் வகையில் நிகழ்ச்சிகளை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Published by:Arun
First published:

Tags: APJ Abdul Kalam, Local News, Virudhunagar