முகப்பு /விருதுநகர் /

சதுரகிரி மலைக்கு பக்தர்களின் வருகை குறைந்தது..

சதுரகிரி மலைக்கு பக்தர்களின் வருகை குறைந்தது..

X
இரண்டு

இரண்டு நாட்கள் தடையால் சதுரகிரி மலையில் வரத்து குறைவு 

Sathuragiri Sundaramahalingam Temple | இரண்டு நாட்கள் விதிக்கப்பட்ட தடை காரணமாக காலை முதலே பக்தர்களின் வருகை குறைவு

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

மழையின் காரணமாக விதிக்கப்பட்ட இரண்டு நாட்கள் தடையின் காரணமாக சதுரகிரி மலையில் பக்தர்கள் வரத்து குறைவாகவே காணப்பட்டது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இம்மலையில் உள்ள மகாலிங்கம் கோவிலுக்கு பல ஊர்களை சேர்ந்த பக்தர்கள்வந்து மலையேறி சிவனை வழிபட்டு செல்கின்றனர்.

வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த மலைக்கு வனப்பாதுகாப்பு மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி மாதத்தில் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் அனுமதிக்கப்பட்ட நாட்களிலும் மழைப்பொழிவு இருப்பின் பக்தர்களின்  பாதுகாப்பு கருதி அனுமதி மறுக்கப்படுவது வழக்கம்

இந்த நிலையில் தை பௌர்ணமியை முன்னிட்டு பிப்ரவரி 3 முதல் 7 வரை பக்தர்கள் மலையேறலாம் என அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளுக்கு மழை எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. இதனால் இரண்டு நாட்கள் மலையேற அனுமதி ரத்து செய்யப்பட்டது. இதற்கென வெளியூரில் இருந்து வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த நிலையில் இரண்டு நாட்கள் கழித்து பக்தர்கள் பிப்ரவரி 5ம் தேதி மலையேற அனுமதிக்கப்பட்டனர். இரண்டு நாட்கள் விதிக்கப்பட்ட தடையால் காலை முதலே பக்தர்கள் வருகை குறைவாகவே காணப்பட்டது. காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்ட நிலையில், வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.

First published:

Tags: Local News, Virudhunagar