Home /virudhunagar /

விருதுநகர் விவசாயிகளுக்கு டிரோன் செயல்முறை விளக்கம் அளிக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகள்..

விருதுநகர் விவசாயிகளுக்கு டிரோன் செயல்முறை விளக்கம் அளிக்கும் வேளாண்மைத்துறை அதிகாரிகள்..

விருதுநகர் விவசாயிகளுக்கு டிரோன் செயல்முறை விளக்கம்.!

விருதுநகர் விவசாயிகளுக்கு டிரோன் செயல்முறை விளக்கம்.!

Drone Training for Virudhunagar Farmers | விருது நகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில், டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் குறித்து வேளாண்மை அதிகாரிகள் அளித்தனர். 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில், டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து வேளாண்மை அதிகாரிகள், விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம்  அளித்தனர்.

தற்போது, நவீன காலத்திற்கு ஏற்றார் போல், விவசாயம் மாறி வருகின்றது. மேலும், விவசாய பணிகளுக்க ஆட்கள் குறைவாக கிடைத்து வருகின்றனர். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான விவசாயங்களை, யுக்திகளை கையாண்டு வருகின்றனர் விவசாயிகள்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் டிரோன் மூலம் உரம் மற்றும் மருந்து தெளித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.

விவசாயிகள் நவீன வேளாண்மை சாகுபடிக்கு உரம், மருந்து, பூச்சிக்கொல்லிகளுக்கு, களை எடுக்கவும் டிரோன்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். இந்நிலையில் நவீன கால வோளண்மையிலும் டிரோன் முக்கிய அங்கம் பிடித்துள்ளது. வரும் காலத்தில் ஆட்கள் பற்றாக்குறையை போக்க டிரோன் தான் முக்கிய காரணியாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

மேலும், டிரோன்களை இயக்க பல்வேறு பயிற்சியும் வோளண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் அளிக்கப்படுகிறது. சில சமங்களில் டிரோன்கள் வேளாண்மை பயன்பாட்டிற்காக வாங்கும் போது, மானியமும் அளிக்கப்படுதாகவும் கூறப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்நிலையில், ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு வங்காநல்லூரில் உளுந்து பயிரிட்டுள்ள வயலில் ராஜபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் திருமலைச்சாமி, வேளாண்மை அலுவலர் தனலட்சுமி உள்பட வேளாண்மை அலுவலர்கள் டிரோன் மூலம் மருந்து மற்றும் உரம் தெளிப்பது குறித்து செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

ஒரு ஏக்கர் பரப்பளவில் 10 நிமிடங்களில் இந்த தெளிப்பான்கள் மூலம் தெளிக்கவும், ஏக்கருக்கு ரூ. 600 மட்டுமே செலவு ஆவதால் நேரமும், கூலியும் மிச்சமாவதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதில் விவசாயிகள் சங்கம் சார்பில் பிள்ளையார்சாமி, சிவன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Published by:Arun
First published:

Tags: Drone, Farmers, Local News, Virudhunagar

அடுத்த செய்தி