ஹோம் /விருதுநகர் /

''புயலுக்கு லீவ்லாம் இல்ல.. ஒழுங்கா ஸ்கூல் போங்க''- விருதுநகர் ஆட்சியரின் கலகல பதில்! 

''புயலுக்கு லீவ்லாம் இல்ல.. ஒழுங்கா ஸ்கூல் போங்க''- விருதுநகர் ஆட்சியரின் கலகல பதில்! 

சைக்ளோன்கு லீவ்லாம் இல்ல ஒழுங்கா சைக்கிள் ரெடி பண்ணிட்டு ஸ்கூல் போங்க!!

சைக்ளோன்கு லீவ்லாம் இல்ல ஒழுங்கா சைக்கிள் ரெடி பண்ணிட்டு ஸ்கூல் போங்க!!

Virudhunagar | விருதுநகரைச் சேர்ந்த மாணவர், ட்விட்டரில் மாவட்ட ஆட்சியரிடம் விடுமுறை கோரியுள்ளார்.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

புயல் காரணமாக தமிழ்நாட்டில் 15 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இந்தநிலையில்,  விருதுநகர் மாவட்டத்திற்கு விடுமுறை விடப்படுமா என்று ட்விட்டரில் மாணவர்கள் சிலர் ஆட்சியரிடம் கேள்வி எழுப்பினர்

இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் சமூக வலைதள பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் அவ்வப்போது டிவிட்டரில் அரசு அதிகாரிகளோடு தொடர்பில் இருந்து வருகின்றனர். அதிலும் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி எப்போதும் சமூக வலைதளங்களை கவனித்து வருபவர் என்பதால், கொஞ்சம் மழை பெய்தால் போதும் சின்ராசா கையில பிடிக்க முடியாது என்பது போல உடனே மாணவர்கள், டிவிட்டரில் வந்து லீவ் கேட்டு டிவிட் போட துவங்கிவிட்டனர்.

தற்போது புயல் காரணமாக தமிழ்நாட்டில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால் நம்ம மாவட்டத்திற்கு புயல் காரணமாக லீவ் ஏதும் விட வாய்ப்பிருக்கா என்று மாணவர் ஒருவர் டிவிட் போட அதற்கு மாவட்ட ஆட்சியர் புயல் உடைய தாக்கம் நம்ம மாவட்டத்திற்கு குறைவு தான். அதனால் ஒழுங்கா உங்க சைக்கில ரெடி பண்ணி ஸ்கூல் போற வழிய பாருங்க என்று அட்வைஸ் செய்து ரிப்ளை செய்துள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar