முகப்பு /விருதுநகர் /

விருதுநகர் மக்களே உஷார்.. அருப்புக்கோட்டைக்கு வரும் ரயில் நேரம் மாற்றியமைப்பு..!

விருதுநகர் மக்களே உஷார்.. அருப்புக்கோட்டைக்கு வரும் ரயில் நேரம் மாற்றியமைப்பு..!

X
ரயில்

ரயில்

Aruppukkottai train time changed | அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் நேர அட்டவணை திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ரயில் நிலையம் மார்க்கமாக விருதுநகர் காரைக்குடி ரயில் தினசரி சென்று வரும் நிலையில், அருப்புக்கோட்டை மார்க்கமாக தாம்பரம் - செங்கோட்டை ரயில் இயக்கப்பட்ட பின்பு அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தின் ரயில் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் வருகின்றன ஏப்ரல் 27ம் தேதி முதல் இந்த அட்டவணை கடைபிடிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதன் படி வேளாங்கண்ணி முதல் எர்ணாகுளம் வரை செல்லும் ரயில் திங்கள் கிழமை நள்ளிரவு 1.18 க்குவந்து சேரும்

மறு மார்க்கமாக எர்ணாகுளம் டூ வேளாங்கண்ணி செல்லும் ரயில் சனிக்கிழமை இரவு 10.48 க்கு வரும்.

எழும்பூரில் இருந்துசெங்கோட்டை வரை செல்லும் ரயில் வியாழன், சனி, ஞாயிறு என இந்த மூன்று நாட்களில் காலை 4.54 க்குவரும்.

இதே போல் வியாழன் சனி ஞாயிறு நாட்களில் மறுமார்க்கமாகசெங்கோட்டை டூ எழும்பூர் செல்லும் ரயில் மாலை 7.33க்கு வந்து சேரும்.

தாம்பரத்தில் இருந்துபுறப்பட்டு திருநெல்வேலி செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை காலை 5.03 க்குவரும், மறுமார்க்கமாகதிருநெல்வேலி டூ எக்மோர் செல்லும் ரயில் வெள்ளிக்கிழமை மாலை 3.10க்கு வந்து சேரும்

இதேபோலதாம்பரத்தில் புறப்பட்டு செங்கோட்டை வரை செல்லும் ரயில் திங்கள் கிழமை காலை 6.44 க்குவரும்

மறுமார்க்கமாகசெங்கோட்டை டூ தாம்பரம் ரயில் திங்கள் கிழமை மாலை 7.43 க்குவரும்.

ALSO READ | விருதுநகரின் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள தெரிஞ்சிக்கணுமா? அப்ப இங்க போங்க!

தினசரி செல்லும் ரயிலாக உள்ள விருதுநகர் காரைக்குடி ரயில் ஞாயிறு தவிர்த்து அனைத்து நாட்களிலும் காலை 6.44 க்குவரும், இதே போன்று காரைக்குடி டூ விருதுநகர் ரயில் சனிக்கிழமை தவிர்த்து மற்ற நாட்களில் மாலை 8.19க்கு வரும்.

கன்னியாகுமரி முதல் புதுச்சேரி வரை செல்லும் ரயில் திங்கள் கிழமை காலை 5.43 க்குவரும் இதே போன்று மறுமார்க்கத்தில் புதுச்சேரி கன்னியாகுமரி ரயில் ஞாயிறு அன்று இரவு 9.16 க்குஅருப்புக்கோட்டை ரயில் நிலையம் வந்து சேரும் என அந்த அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Aruppukkottai Constituency, Local News, Southern railway, Train, Virudhunagar