ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டத்தில்  துலுக்கப்பட்டி  மற்றும் தொட்டியபட்டி துணை மின் நிலையங்களில், நாளை (15ஆம் தேதி) மின் தடை ஏற்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் துலுக்கம்பட்டி, தொட்டியபட்டி துணை மின் நிலையங்களில் செவ்வாய் கிழமை (நாளை )மின் தடை ஏற்படும் இடங்கள் குறித்த  அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால், பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Must Read : தமிழ்நாட்டின் ஸ்பா - குற்றாலம் மெயின் அருவியின் சிறப்புகள் தெரியுமா?

அதன்படி, நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் தடை ஏற்படும் இடங்கள், வச்சக்காரப்பட்டி, எட்டிநாயக்கன்பட்டி, பட்டம் புதூர், குப்பாம்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. என  மின்வாரிய நிர்வாக என்ஜினீயர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

இதேபோல், தொட்டியபட்டி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடைசெய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதன்படி புதுப்பட்டி, கோதை நாச்சியார் புரம், கொத்தங்குளம், முத்துலிங்கபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரிபுதூர், ராஜீவ்காந்தி நகர், இ.எஸ்.ஐ. காலனி, வேட்டை பெருமாள் கோவில், விஷ்ணு நகர், மொட்ட மலை, வேப்பங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது என மின் செயற்பொறியாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Power cut, Power Shutdown, Virudhunagar