ஹோம் /விருதுநகர் /

அழிந்து வரும் சாத்தூர் நிப்களின்  தயாரிப்பு முறை தெரியுமா?

அழிந்து வரும் சாத்தூர் நிப்களின்  தயாரிப்பு முறை தெரியுமா?

X
நிப்

நிப் தயாரிக்கும் முறை

Virudhunagar News | சாத்தூரில் தயாரிக்கப்படும் நிப்கள் தான் இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்தன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

புகழ்பெற்று விளங்கிய சாத்தூர் இங்க் பேனா நிப்கள் தயாரிப்பு தொழில் இன்று பால் பாயிண்ட் பேனாக்கள் வருகையால் அழிவின் விளிம்பில் உள்ளன.

முன்னொரு காலத்தில் 500க்கும் அதிகமான தொழிற்சாலைகள் சாத்தூரில் செயல்பட்டு வந்த நிலையில் தற்போது இரண்டே இரண்டு தொழிற்சாலைகள் தான் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இங்க் பேனாக்கள் புழக்கம் அதிகமாக இருந்த காலக்கட்டத்தில் சாத்தூரில் தயாரிக்கப்படும் நிப்கள் தான் இந்தியா முழுவதும் ஆதிக்கம் செலுத்தி வந்தன. மும்பையில் இது போன்ற நிப் தொழிற்சாலைகள் காணப்பட்டாலும் அவற்றை விட சாத்தூர் நிப்களின் விலை குறைவு என்பதால் அனைவரும் சாத்தூர் நிப்களையே வாங்கி பேனா தயார் செய்து வந்தனர்.

முழுக்க முழுக்க மனித உழைப்பால் தயாராகி வரும் இந்த நிப்கள், நுணுக்கமான வேலைகள் கொண்டவை. இதற்கென இரும்பு தகடுகளை வாங்கி அதில் 13 வேலைப்பாடுகளை செய்து பேனா நிப்களை தயார் செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இது குறித்து பேசிய நிப் தொழிலாளர் ஒருவர், இது மிகவும் நுணுக்கமான வேலைகள் கொண்டது. இன்றைய காலகட்டத்தில் இது போன்ற வேலைகள் செய்வதற்கு ஆட்களும் இல்லை. இளைஞர்களுக்கு இதில் உட்கார்ந்து நிப் செய்யும் அளவிற்கு பொறுமையும் இல்லை. 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த தொழிலில் ஈடுபட்டு வந்த தனக்கு இதை விட்டால் வேறு வழியில்லை என்பதாலே இதை செய்து வருவதாகவும், எங்களுடைய காலத்திற்கு பின்பு இந்த சாத்தூர் நிப்கள் இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar