ஹோம் /விருதுநகர் /

Virudhunagar | கால்வாய் கரையை உடைத்து எல்லையைக் காத்த வீரன்- மூவரை வென்றான் கிராமத்தின் வரலாற்று பின்னணி தெரியுமா

Virudhunagar | கால்வாய் கரையை உடைத்து எல்லையைக் காத்த வீரன்- மூவரை வென்றான் கிராமத்தின் வரலாற்று பின்னணி தெரியுமா

மூவரை

மூவரை வென்றான் கிராமம்

Virudhunagar | விருதுநகர் மாவட்டத்திலுள்ள மூவரை வென்றான் கிராமத்திற்கான பெயர் காரணம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Srivilliputhur, India

தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு கிராமத்திற்கும் பின்னால் ஒரு நீண்ட நெடிய வரலாறு ஒளிந்திருக்கும். அதை கண்டுபிடித்தாலே அந்த கிராமத்தின் பெயருக்கான காரணத்தை அறிந்துவிடலாம்.

அந்த வகையில் விருதுநகர் ஶ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மூவரை வென்றான் கிராமத்தின் கதையும் அதன் பெயரும் ஒத்து போகிறது.

மூவரை வென்றான்

விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு அழகிய கிராமம். இந்த கிராமத்திற்கான பெயர் காரணத்தை அறிந்து கொள்ள நாம் வரலாற்று பக்கங்களை புரட்டி 18ம் நூற்றாண்டிற்கு செல்ல வேண்டும்.

மூவரை வென்றான் கிராமம்

மூவரை வென்றான் கிராமத்தின் வரலாறு குறித்து நா.பார்த்த சாரதி என்பவர் மூவரை வென்றான் என்ற பெயரில் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில், ‘பாண்டிய மன்னனின் ஆட்சிக்கு இராணி மங்கம்மாள் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. அவர் இந்த ஊரை வீர மல்லன் என்பவருக்கு இனாமாக கொடுத்தார். அந்த வகையில் வீரமல்லன் இந்த பகுதியை நிர்வகித்து வந்தார்.

மூவரை வென்றான் கிராமம்

நத்தம்பட்டி ஜமீன்:

இந்த ஊரின் தெற்கே உள்ள நத்தம்பட்டி பகுதியை வீரமருது என்பவர் ஆட்சி செய்து வந்தார். இவர் தொடக்கம் முதலே வீரமல்லனோடு இனக்கம் காட்டாமல் இருந்து வந்தார். நத்தம்பட்டி பகுதி மிகவும் செழுமையாக இருந்தது. ஆனால் மூவரை வென்றான் கிராமமோ வறண்டு காணப்பட்டது.

மூவரை வென்றான் கிராமம்

இதற்கு காரணம் நத்தம்பட்டியில் இரண்டு கண்மாய்கள் இருந்தன. மூவரை வென்றான் கிராமத்தில் கண்மாய் ஏதும் இல்லை. இதனால் இந்த இரண்டு ஊர்களின் வழியாக பாயும் கன்னிமலையாற்றின் நீர் முழுவதும் நத்தம்பட்டி கண்மாயில் சேகரிக்கப்பட்டன.

வீரமல்லன் பொறுப்பேற்ற பின்பு மூவரை வென்றான் பகுதியில் ஒரு கண்மாய் வெட்டினார். இந்த பகுதி சற்று பள்ளம் என்பதால் ஆற்றின் பெரும்பகுதி நீர் இங்கு வந்து நத்தம்பட்டி கண்மாயின் நீர்வரத்து குறைய தொடங்கியது. இதனால் வீரமல்லன், வீரமருது இடையே சண்டை அதிகரித்து போர்சுழல் ஏற்பட்டது.

மூன்று ராஜ்ஜியங்களின் படையெடுப்பு:

நத்தம்பட்டி படைகளே போதும் வீரமல்லனை வெல்ல. ஆனால் நத்தம்பட்டி ஜமீன் தன்னோடு சாப்டூர், தேவதான ஜமீன்களையும் சேர்த்து கொண்டார். மூன்று பேரையும் எதிர்கொள்ள முடியாமல் தவித்த வீரமல்லன் இறுதியில் போரிட்டு நேர விரயம் செய்ய வேண்டாம். அதற்கு பதிலாக நீங்கள் என் ஊருக்குள் வந்து ஒரு மூன்று நாழிகை என்னுடன் சண்டையிட்டு தாக்குபிடித்தால் போதும் நான் இந்த ஊரை உங்களிடம் ஒப்படைத்துவிட்டு செல்கிறேன்.

ஒரு வேளை தோற்றுவிட்டால் நத்தம்பட்டியை என்னிடம் ஒப்படைத்து விட்டு செல்ல வேண்டும் என்றார். இவரின் யோசனையை மூன்று பேரும் ஏற்று பின்பு போட்டிக்கான தேதி குறிக்கப்பட்டது.

வீரமல்லனின் அறிவுக்கூர்மை:

போட்டிக்கு ஒரு நாள் முன்பு வீரமல்லன் தன்னுடைய ஆட்களை அனுப்பி நத்தம்பட்டி கண்மாயை உடைத்து விட்டார். பின்னர் தனது ஊரிலும் உள்ள கண்மாயையும் உடைத்துவிட்டார். இதனால் பெருவெள்ளம் ஓடியது. எல்லையில் படைகள் ஊருக்குள் செல்ல முடியாமல் நின்றன. சரி மற்றொரு வழியான கிழக்கு பகுதியை நோக்கி சென்ற போது அங்கு ஆட்கள் நுழையாத படி நெருப்பு வைக்கப்பட்டிருந்தது.

இதனால் படைகள் ஊருக்குள் செல்ல முடியாமல் நின்றன. மூன்று நாழிகையும் முடிந்து, வீரமல்லனும் வெற்றி பெற்றார். இப்படி தன் அறிவு கூர்மையால் மூன்று அரசர்களை வென்றமையால் இவ்வூர் மூவரை வென்றான் என பெயர் பெற்றது.

Published by:Karthick S
First published:

Tags: Local News, Virudhunagar