Home /virudhunagar /

விருதுநகர் மாவட்டத்தில் நாளை எந்தெந்த ஊர்களில் மின்தடை?

விருதுநகர் மாவட்டத்தில் நாளை எந்தெந்த ஊர்களில் மின்தடை?

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

விருதுநகரில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள்

VIRUDHUNAGAR : விருதுநகர் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரகோட்டை, ந.சுப்பையாபுரம், சாத்தூர், சிவகாசி இ.எஸ்.ஐ., சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய 9 துணை மின் நிலையங்களில் நாளை ( சனிக் கிழமை ) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றம் பணி நடக்க இருக்கின்றது. மேலும், இதை சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள பட இருக்கின்றது.

மேலும், மின் தடை செய்யப்படும் பகுதிகளில் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் பொதுமக்கள் மின் தேவை இருப்பின் வேறு மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ராஜபாளையத்தில் 17-ம் தேதி முழு கடையடைப்பு அறிவிப்பு

மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆகையால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரகோட்டை, ந.சுப்பையாபுரம், சாத்தூர், சிவகாசி இ.எஸ்.ஐ., சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய மின் நிலையத்தில் விநியோகம் இருக்காது என்ற மேற்கண்ட தகவலை சிவகாசி கோட்ட மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சிவகாசி கோட்டத்துக்கு உட்பட்ட வெம்பக்கோட்டை, செவல்பட்டி, கங்கரகோட்டை, ந.சுப்பையாபுரம், சாத்தூர், சிவகாசி இ.எஸ்.ஐ., சிவகாசி சாட்சியாபுரம், திருத்தங்கல், சுக்கிரவார்பட்டி ஆகிய 9 துணை மின் நிலையங்களில் உள்ள 60 கிராமங்களில் மின் தடை ஏற்படுகிறது என்று மின்வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி