முகப்பு /விருதுநகர் /

இனி சிலிண்டர் தேவையில்லை.. வீட்டில் இந்த சாதனம் இருந்தால் போதும் குப்பைகள் வைத்தே சமைக்கலாம்!

இனி சிலிண்டர் தேவையில்லை.. வீட்டில் இந்த சாதனம் இருந்தால் போதும் குப்பைகள் வைத்தே சமைக்கலாம்!

X
பயோ

பயோ கேஸ் அடுப்பு

Bio Gas Plant | சாதாரண சமையல் எரிவாயுவற்கு மாற்றாக உணவுக்கழிவுகளில் இருந்து தயாரிக்கப்படும் பயோ கேஸ் அடுப்புகளை பயன்படுத்துவதன் மூலம் எரிவாயுக்கான செலவை குறைக்க முடியும்

  • Last Updated :
  • Virudhunagar, India

சமையல் கேஸ் விலை விண்ணை முட்டும் அளவில் உயர்ந்து கொண்டே செல்லும் நிலையில்,சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வந்துள்ளது தற்போது பயோ கேஸ் எனப்படும் உணவுகள் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் சமையல் எரிவாயு.

கேரளா போன்ற வெளி மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்த இது போன்ற பயோ கேஸ் அடுப்புகளை தற்போது விருதுநகர் மாவட்டத்தில் மக்களிடம் போய் சேர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ள முன்னாள் இராணுவ வீரர் முனியசாமியிடம் பேசிய போது அவர் இது பற்றி விளக்கினார்.

எல்பிஜி சமையல் கேஸ் தற்போது 1120 ஆக விற்பனையாகி வரும் சுழலில் நடுத்தர வர்க்கத்தினரால் கேஸ் வாங்கி சமைப்பது என்பது அவர்களின் மாத பட்ஜெட்டில் துண்டு விழ செய்வதால் அதற்கு ஒரு சிறந்த ஒரு மாற்றாக பயோ கேஸ்ஸை பயன் படுத்தலாம்.

உணவுக்கழிவுகள்:

வீட்டில் இருந்து வரும் உணவுக்கழிவுகள்‘, காய்கறி கழிவுகளை மட்கச்செய்து அதில் உருவாகும் மீத்தேனை எடுத்து சமைப்பதன் மூலம் சமையல் கேஸ்கான செலவை குறைப்பதோடு வீட்டில் இருந்து வெளியேறும் கழிவுகளையும் குறைத்து சுற்றுச்சூழல் பாதுகாப்பில் பங்கெடுக்கலாம்.

top videos

    சராசரியாக ஒரு நாளைக்கு 45 நிமிடம் இதை பயன்படுத்தி சமைக்கலாம் என்று கூறும் முனியசாமி, அதிகமான கழிவுகளை போடுவதன் மூலம் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 90 நிமிடம் வரை சமைக்கலாம் என்கிறார். மேலும் எல்பிஜி கேஸ் போல இல்லாமல் இது காய்கறி கழிவுகளை கொண்டு உருவாக்கப்பட்ட எரிவாயு என்பதால் இதில் விபத்து வாய்ப்புகள் குறைவு என்கிறார்.

    First published:

    Tags: Local News, LPG Cylinder, Virudhunagar