தேனீக்கள் போல உழைக்கும் உயிர்களை இந்த உலகில் பார்ப்பது கடினம். கூட்டை கட்டுவது, இளம் குஞ்சுகளுக்கு உணவளிப்பது, தேன் சேகரிப்பது, அதை சேமிப்பது என 24 மணிநேரமும் அழைத்துக்கொண்டே இருப்பவை. பொதுவாக ஒரு தேன் கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ, ஒரு சில ஆண் தேனீக்கள் மற்றும் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரையிலான வேலைக்கார தேனீக்கள் இருக்கும்.
இவை எப்படி ராணி தேனீயாகவும், ஆண் தேனீயாகவும், வேலைக்கார தேனீயாகவும் இயற்கையில் உருவாகிறது என்பதை தெரிந்துகொண்டால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்கிறார் விருதுநகர் அருகே தேனீ வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயி தங்க முனிசாமி.
இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், “எப்படி மனிதரில் ஆண், பெண் பாலினத்தை X மற்றும் Y குரோமோசோம்கள் தீர்மானிக்கின்றனவோ அதுபோல தேனீக்களில் அவைகளுக்கு கொடுக்கப்படும் உணவுகளை வைத்தே அவை ஆண் தேனீக்கள் மற்றும் வேலைக்கார தேனீக்களாக உருவாகின்றன. ராணி தேனீ உருவாக்கும் நிகழ்வு என்பது அரிதான நிகழ்வு. ராணி தேனீ முட்டையிடும்போது சாதாரண கருவுற கூடி முட்டைகளாக தான் இருக்கும். அந்த முட்டைகளுக்கு பூக்களின் தேன், நீர், மகரந்தம் மற்றும் வேலைக்கார தேனீக்களின் உணர்கொம்புகளில் சுரக்க கூடிய ராயல் ஜெல்லி எனும் பொருள் இந்த நான்கும் உணவாக கொடுக்கப்படுகின்றன.
இதில் எந்த முட்டைக்கு 3 நாட்கள் தொடர்ந்து ராயல் ஜெல்லியும் , 2 நாட்கள் மகரந்தமும், ஒரு நாள் தேனும் நீரும் கொடுக்கப்படுகிறதோ அது ராணி தேனீயாக உருவாக்கும். இதேபோல் ஒரு முட்டைக்கு 2 நாட்கள் தொடர்ந்து ராயல் ஜெல்லியும், ஒரு நாள் மகரந்தமும் நீரும் கொடுத்தால் அது ஆண் தேனீயாகவும், ஒரே ஒரு நாள் மட்டும் ராயல் ஜெல்லியும் மற்ற உணவு பொருட்களும் கொடுத்தால் அது வேலைக்கார தேனீக்களாக உருவாக்கும்.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
ஆண் தேனீக்கள் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே பயன்படும். ராணி தேனீ கூட்டத்தை வழிநடத்தும் ஒரு தலைவியாக செயல்படும். ஒரு கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ தான் இருக்கும். சராசரியாக இந்த ராணி தேனீ 3 ஆண்டுகள் வரை உயிர் வாழும். இந்த ராணி தேனீக்கு வயதாகும்போது கூட்டை விட்டு வெளியேறி விடும். அதன் பின்னர் வேலைக்கார தேனீக்கள் தங்களுக்குள் ஆலோசித்து அடுத்த தலைவியை உருவாக்கும் வேலையில் ஈடுபடும். ராணி தேனீ உயிரோடு நன்றாக இருக்கும்போது புது ராணி தேனீ உருவாகும் பட்சத்தில் பழைய ராணி தேனீயை கூட்டை விட்டு சில படைகளை கூட்டிக்கொண்டு வெளியேறிவிடும். இவை தான் உழைக்கும் தேனீக்களின் நிர்வாகம்” என்று தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Virudhunagar