ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் விளைந்த பருத்திகளை இங்கிலாந்து கொண்டு செல்ல ஆங்கிலேயர் போட்ட சாலை பற்றி தெரியுமா?

விருதுநகரில் விளைந்த பருத்திகளை இங்கிலாந்து கொண்டு செல்ல ஆங்கிலேயர் போட்ட சாலை பற்றி தெரியுமா?

X
“தி

“தி கிரேட் காட்டன் ரோடு”

Virudhunagar Cotton Road : மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை தான் அத்தகைய சிறப்பு பெயருக்குரியது. பரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு என்பதை அறிந்தோர் சிலரே. 

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

தமிழ்நாட்டில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலைக்கு தி கிரேட் காட்டன் ரோடு என்ற ஒரு சிறப்பு பெயர் இருப்பது உங்களுக்கு தெரியுமா? மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை தான் அத்தகைய சிறப்பு பெயருக்குரியது.

பரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்த தேசிய நெடுஞ்சாலைக்கு ஒரு நீண்ட நெடிய வரலாறு உண்டு என்பதை அறிந்தோர் சிலரே. அதை அறிந்து கொள்ள சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்று பார்க்க வேண்டும்.அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

ஆங்கிலேயர் நம்மை ஆட்சி செய்து கொண்டிந்த காலத்தில் நம் நாட்டில் கிடைத்த பொருட்களை இங்கிலாந்து கொண்டு சென்றனர் என்பதை அனைவரும் அறிவோம். அப்படி நம் நாட்டில் கிடைத்த பொருட்களை இங்கிலாந்து கொண்டு செல்வதற்காக சரியான போக்குவரத்து வசதி நம் நாட்டில் இல்லை.

இதையும் படிங்க : விருதுநகரில் நடைபெற்ற கல்விக்கடன் முகாம்கள்.. உடனடியாக 29 மாணவர்களுக்கு ரூ.1.75 கோடி கல்வி கடன்..

அதனால் ஆங்கிலேயர்கள் நிறைய போக்குவரத்து வசதிகளை இந்தியாவில் அறிமுகம் செய்தனர். அதற்கு சிறந்த உதாரணமாய் இருப்பது ரயில்வே. நாட்டின் ஒரு மூலையில் கிடைத்த பொருட்களை மற்றொரு மூலைக்கு எளிதாக கொண்டு செல்லவே ரயில் பாதைகள் இந்தியாவில் போடப்பட்டன.

தி கிரேட் காட்டன் ரோடு :

வறண்ட பகுதியான கரிசல் காட்டு பூமியான விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பருத்தி தான் அதிகளவில் பயிரிடப்பட்டது. இந்த பருத்திக்கு இங்கிலாந்தில் நல்ல ஒரு வரவேற்பு இருந்தது. அதனாலேயே இந்த பருத்திகளை இங்கிலாந்து கொண்டு செல்ல திட்ட ஆங்கிலேயர்கள்.

மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி துறைமுகம் வரை இதற்கென ஒரு சாலை போட்டு அதற்கு தி கிரேட் காட்டன் ரோடு என்ற பெயரையும் வைத்தனர். இந்த சாலை வழியாக தான் அன்றைய காலகட்டத்தில் நம் பகுதியில் விளைந்த பருத்திக்கள் இங்கிலாந்து சென்றன.

இந்த காட்டன் ரோடு என்ற பெயர் இன்றும் மாறாமல் இருப்பதற்கு காரணமாக இருப்பவர் சமீபத்தில் காலமான ஜெயவிலாஸ் குழும தலைவர் டாக்டர்.தினகரன். இவரால் 1965ல் தொடங்கப்பட்ட ஜெயவிலாஸ் பஞ்சு ஆலைகள் தான் கிட்ட தட்ட 60 ஆண்டுகளாக காட்டன்களை இந்த சாலை வழியாக ஏற்றுமதிக்கு அனுப்பி வருகின்றன.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால் தி கிரேட் காட்டன் ரோடு பெயர் மாறாமல் இருப்பதில் இவருக்கும் இவருடைய ஜெயவிலாஸ் குழுமத்திற்கும் மிகப்பெரிய பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றளவும் இந்த சாலை வழியாக தான் பருத்தி ஏற்றுமதிக்கு செல்கிறது. பருத்தி கொண்டு செல்ல தனி சாலையே போட்ட கதையை கேட்கும் போது வியப்பை தருகிறது. நம் பொருட்களின் மதிப்பையும் இது உணர்த்துகிறது.

செய்தியாளர் : அழகேஸ்வரன் - விருதுநகர்

First published:

Tags: Local News, Virudhunagar