Home /virudhunagar /

சிவகாசியில் "ஸ்மைலி" பேட்ஜ்கள் எப்படி தயாராகிறது?

சிவகாசியில் "ஸ்மைலி" பேட்ஜ்கள் எப்படி தயாராகிறது?

சிவகாசி

சிவகாசி - ஸ்மைலி பேட்ஜ் உற்பத்தி

Sivakasi Smiley Badge Manfacturers | சிவகாசி - சாத்தூர் சாலையில் விஜயா நர்சிங் ஹோம் எதிரில் இமேஜ் கம்யூனிகேஷன் என்ற கடையில் ஸ்மைலிகள் செய்து தருவதாக அறிந்து அங்கு சென்று பார்த்த போது ஸ்மைலி பேட்ஜ் செய்யப்படும் முறை பற்றி விளக்கினார் அதன் உரிமையாளர் அருண் குமார்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Sivakasi, India
இந்தியாவின் குட்டி ஜப்பான் என்றழைக்கப்படும் சிவகாசியின் பெயரை கேட்டாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது பட்டாசு தான். உண்மையில் பட்டாசுகள் தவிர்த்து நம்ம சிவகாசியில் நிறைய சிறு தொழில்கள் நடைபெற்று வருகின்றன. இந்த பகுதியில் இயற்கை வளம்  குறைவு என்றாலும் தொழில் வளத்திற்கு குறையே இல்லை.

அந்தவகையில் சிறுவயதில் நாம் சண்டைகளில் சிறு சிறு ஸ்மைலி பேட்ஜ்களை குத்தி அழகு பார்த்திருப்போம். அந்த பேட்ஜ்கள் எப்படி செய்யப்படுகின்றன என தேடிய போது சிவகாசி - சாத்தூர் சாலையில் விஜயா நர்சிங் ஹோம் எதிரில் இமேஜ் கம்யூனிகேஷன் என்ற கடையில் ஸ்மைலிகள் செய்து தருவதாக அறிந்து அங்கு சென்று பார்த்த போது ஸ்மைலி பேட்ஜ் செய்யப்படும் முறை பற்றி விளக்கினார் அதன் உரிமையாளர் அருண் குமார்.

தாங்கள் கடந்த இரண்டு வருடங்களாக ஸ்மைலி பேட்ஜ்கள் மற்றும் வாசகரின் தேவைக்கு ஏற்ப பேட்ஜ்கள் செய்து வருவதாக தெரிவித்தார். ஒரு பேட்ஜ் ஒன்று தனியாக வாங்கினால் 25 ரூபாய் என்று விற்கப்படுகிறது. இதுவே அதிக எண்ணிக்கையிலான ஆர்டர் எனும் பட்சத்தில் அதன் விலையில் சலுகை தருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஸ்மைலி பேட்ஜ் மட்டுமல்லாது காவல் துறை, ஆட்டோ ஓட்டுனர்கள் உபயோகிக்கும் நேம் பேட்ஜ்களையும் தயாரித்து வருகின்றனர். பேட்ஜ்கள் வாங்க விரும்புவோர் 98433 75090 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Sivakasi, Virudhunagar

அடுத்த செய்தி