ஹோம் /விருதுநகர் /

விருதுநகர் | மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி- ஆர்வத்துடன் பங்கேற்ற சிலம்பம் வீரர்கள்

விருதுநகர் | மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி- ஆர்வத்துடன் பங்கேற்ற சிலம்பம் வீரர்கள்

X
சிலம்பப்

சிலம்பப் போட்டியில் மாணவர்கள்

Virudhunagar | விருதுநகரில் மாவட்ட அளவிலான சிலம்பப் போட்டி நடைபெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் மாவட்ட அளவிலான சிலம்பபோட்டி நடைபெற்றது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த வீரர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

விருதுநகரில் கடந்த 22.1.23 அன்று விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் விருதுநகர் அரிமா சங்கம் சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளில் நடைபெற்ற இப்போட்டியில் ஒரு வீரர் மூன்று பிரிவுகளில் கலந்து கொள்ளலாம் என கூறப்பட்டு இருந்தது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றி தங்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.

சிலம்பப் போட்டியில் மாணவர்கள்

மாலை வரை நடைபெற்ற இப்போட்டியில்இறுதியாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் பரிசு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

விருதுநகரில் நடைபெற்ற தென்மாவட்ட அளவிலான பரதநாட்டியப் போட்டி

இது குறித்து பேசிய மாணவர்கள் சிலர் தனியார் அமைப்பு சார்பில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றது மகிழ்ச்சி என்றும் இனி வரும் காலங்களில் இது போன்ற நிறைய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகம் வந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

செய்தியாளர்: அழகேஷ், விருதுநகர்.

First published:

Tags: Local News, Virudhunagar