விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் செஸ் சூப்பர் கிங்ஸ் செஸ் அகாடமி நடத்திய மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள சி.எஸ்.ஐ போர்டிங் நடுநிலைப்பள்ளியில் செஸ் சூப்பர் கிங்ஸ் அகாடமி நடத்திய 7, 10, 13 மற்றும் 17 வயதுக்குட்பட்டோர் பிரிவுகளில் மாவட்ட அளவிலான முதலாம் ஆண்டு சிறப்பு செஸ் போட்டிகள் நடைபெற்றது. இதில் 7 மற்றும் 17 வயது பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவிலான செஸ் போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். இந்த செஸ் போட்டிகளில் அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர் , காரியாபட்டி உள்ளிட்ட விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் இருந்து வந்த மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுடலைமணி, சிஎஸ்ஐ போர்டிங் பள்ளி தாளாளர் செல்லப்பாண்டி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப் பள்ளி தாளாளர் நெல்சன் துரைராஜ், ஆடிட்டர் கிருபா ராஜ்குமார், நகர்மன்ற உறுப்பினர் டுவிங்கிளின் ஞானபிரபா ஆகியோர் பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கினார்.போட்டி ஏற்பாடுகளை செஸ் சூப்பர் கிங்ஸ் அகாடமியை சேர்ந்த சாமுவேல் செய்திருந்தார். இந்த போட்டிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
உங்கள் நகரத்திலிருந்து(Virudhunagar)
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.