Home /virudhunagar /

பழங்கால பொருட்கள் கண்காட்சி.. ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.. - விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

பழங்கால பொருட்கள் கண்காட்சி.. ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.. - விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

இன்றைய விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய செய்திகள்

Virudhunagar District: விருதுநகர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற சில முக்கிய நிகழ்வுகளையும், செய்திகளையும் இத்தொகுப்பில் காணலாம்..

    1. சர்வதேச அருங்காட்சியக தினம் விருதுநகரில் பழங்கால பொருட்கள் கண்காட்சி

    சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி விருதுநகரில் அரசு அருங்காட்சியகத்தில் பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். மேலும் பழங்கால பொருட்களை பெருமளவு காட்சிப்படுத்திய நபர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

    விருதுநகரில் அரசு அருங்காட்சியகத்தில் சர்வதேச அருங்காட்சியக தினத்தையொட்டி பழங்கால பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது. இக்கண்காட்சியை பள்ளி கல்லூரி மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மேலும் இக்கண்காட்சியில் சிவகாசியை சேர்ந்த ராஜராஜன் பழங்காலத்தில் தயாரிக்கப்பட்ட மரச்சாமான்கள் மற்றும் பல்வேறு கலை பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன மரங்கள் அனைத்தும் கரண்ட் இல்லாத காலத்தில் செதுக்கப்பட்ட தாகம் இவை அனைத்தும் உயிரோட்டத்துடன் இருந்தது இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மர்மங்களுக்கு பாலிஷ் போட்டு பராமரித்து வருகிறார். இவைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

    மேலும் அதேபோல பழங்காலத்தில் பயன்படுத்தப்பட்ட கடிகாரங்கள் ரேடியோ பரமபத கட்டை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் பொருந்திய பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
    அதேபோல் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு இடையே அருங்காட்சியக தினத்தையொட்டி ஓவிய போட்டி மற்றும் பேச்சுப் போட்டி நடைபெற்றது. போட்டியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
    அதேபோல் பழங்கால பொருட்களை சேகரித்து காட்சிப்படுத்திய சிவகாசியை சேர்ந்த ராஜராஜன் என்பவருக்கு முதல் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது. அதேபோல் இரண்டு மூன்று இடங்களை பிடித்த அவர்களுக்கு பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
    பழங்கால கண்காட்சியை உள்ளூர் வெளியூர் பள்ளி கல்லூரி மாணவிகள் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    2.பள்ளி மாணவிகள்-இளம்பெண்கள் மாயம்

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாலையம்பட்டி இந்திராநகரைச் சேர்ந்தவர் செண்பகவள்ளி. இவரது மகள் பிளஸ்-1 படித்து வருகிறார்.  சம்பவத்தன்று தட்டச்சு பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டுச் சென்ற மாணவி பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பலனில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர் கல்போது கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தையா கனி. பட்டாசு தொழிலாளி. இவருக்கு 6 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். இதில் பிளஸ்-2 படிக்கும் ஒரு மகள் சம்பவத்தன்று திடீரென மாயமானார். பல இடங்களில் தேடி யும் கண்டுபிடிக்க முடிய வில்லை. வச்சக்காரபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி, கல்குறிச்சி சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மகள் ஈரோட்டில் உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். சில வாரங்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த இவர் சம்பவத்தன்று வெளியே செல்வதாக கூறிவிட்டுச் சென்றார். ஆனால் பின்னர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மல்லாங்கிணறு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகாசி அண்ணா காலனியைச் சேர்ந்தவர் ஷாஜாத்தி பேகம். இவரது மகள் மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை உள்ளது.

    இந்த நிலையில் மணிகண்டன் மனைவியை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதன் காரணமாக குழந்தைகளுடன் அந்தபெண் தாய் வீட்டுக்கு வந்துவிட்டார். வேலைக்கு சென்று வந்த அவர் திடீரென 3 குழந்தைளுடன் மாயமானார். இதுகுறித்து சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    3. ரெயில்வே மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்.எல்.ஏ.

    ராஜபாளையம்-சத்திரப்பட்டி ரோடு வெம்பக்கோட்டை ரெயில்வே மேம்பால பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் மற்றும் உதவி பொறியாளர் முன்னிலையில் மேம்பாலம் நடைபெறும் பணியை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார். மேலும் பணிகளை துரிதமாக முடிக்க ஆலோசனைகள் வழங்கினார்.
    இந்த ஆய்வின் போது மின்சாரத்துறை மூலமாக மின் கம்பத்தை அகற்றி தருமாறும்,நகராட்சி நிர்வாகம் மூலமாக மரங்களை அகற்றி தருமாறும் மேம்பால பணி ஒப்பந்ததாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதுகுறித்து இருதுறை அதிகாரிகளிடம் பேசி விரைவில் பணி நிறைவடைய ஒத்துழைப்பு தருவதாக எம்.எல்.ஏ. உறுதி அளித்தார்.

    மேலும் மேம்பால பணிகள் இன்னும் 5 மாதத்தில் நிறைவடைந்து தீபாவளி பரிசாக மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றார்.
    அதிகாரிகளை முடுக்கிவிட்டு மேம்பால பணிகளை துரிதப்படுத்திய தங்கபாண்டியன் எம்.எல். ஏ.வின் நடவடிக்கைகளை சமூக ஆர்வலர்கள் வரவேற்றனர். இந்த நிகழ்வில் தி.மு.க. நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ் மற்றும் நிர்வாகிகள், நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    4. டிஎன்பிசி குரூப் 2 தேர்வு 94 மைங்களில் 39,795 பேர் எழுத ஏற்பாடு கலெக்டர் தகவல்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் டிஎன்பிசி குரூப் 2, குரூப் 2ஏ பணியிடங்களுக்கு மே.21 அன்று நடைபெற உள்ள முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் மேகநாதரெட்டி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் கூறுகையில், மாவட்டத்தில் 94 தேர்வு கூடங்களில் 137 தேர்வு மையங்களில் 39,795 பேர் எழுத உள்ளனர். தேர்வு மைய கண்காணிப்பில் 137 முதன்மை கண்காணிப்பாளர்கள், 199 ஆய்வு அலுவலர்கள், 26 மொபைல் பார்டி, 13 பறக்கும் படை அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 137 தேர்வு மையங்களுக்கும் 143 வீடியோ கிராபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர் வட்டத்தில் 13 தேர்வு மையங்கள், அருப்புக்கோட்டை வட்டத்தில் 23, ராஜபாளையம் வட்டத்தில் 22, சாத்தூர் வட்டத்தில் 9 சிவகாசி வட்டத்தில் 17, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 10 என 94 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெறும். தேர்வர்கள் காலை 8.30 மணிக்கு முன்னதாக தேர்வு அறைக்கு வரவேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின் விடைத்தாள் கொடுக்க வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டும் கொடுக்கப்படும். நுழைவுசீட்டு இல்லாமல் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கால்குலேட்டர், மொபைல் போன் தேர்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. தேர்வு கண்காணிப்பாளர்களும் செல்போன் பயன்படுத்த கூடாது, என்றார். கூட்டத்தில் நேர்முக உதவியாளர் காளிமுத்து, சார் ஆட்சியர் பிருதிவிராஜ், கோட்டாட்சியர்கள் கல்யாணகுமார், புஷ்பா மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

    5. விழிப்புணர்வு பயிற்சி முகாம்

    திருவில்லிபுத்தூர் நகராட்சி சார்பில் மேலாண்மை தனியார் செப்டிக் டேங்க் லாரி உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான விழிப்புணர்வு பயிற்சி முகாம் நகராட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் தங்கம் ரவிக்கண்ணன் தலைமை வகித்தார். இந்த பயிற்சி கூட்டத்தில் நகர்மன்ற ஆணையாளர் மல்லிகா, சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ் மற்றும் சந்திரா, நகராட்சி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
    மேலும் இந்நிகழ்வில் விரைவில் திறக்கப்பட உள்ள கழிவு மேலாண்மை சுத்திகரிப்பு ஆலை பற்றியும், அதில் நடைபெறவிருக்கும் செயல்முறைகள் மற்றும் ஓட்டுநர்களுக்கான காப்பீடு திட்டம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.

    6. பெண்ணை கொலை செய்தவர் கைது

    திருவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் ராஜீவ் காலனியில் லட்சுமணன் மற்றும் காளீஸ்வரி (45) ஆகிய இருவரும் குடி இருந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு காளீஸ்வரி வீட்டுக்குள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று பார்த்தபோது, வீட்டில் காளீஸ்வரி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். போலீசார் விசாரணையில், உடன் வசித்து வந்த லட்சுமணன் மாயமானது தெரியவந்தது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பின் லட்சுமணனை போலீசார் கைது செய்து விசாரித்தனர். மேலும் போலீசார் விசாரணையில் லட்சுமணன், காளீஸ்வரியை கொலை செய்ததும் தெரியவந்தது.

    செய்தியாளர்: அ.மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி