முகப்பு /விருதுநகர் /

இதென்ன புதுசா இருக்கு..! இனி விசேஷங்களில் மொய் வைக்க வந்துவிட்டது புது டெக்னிக்..

இதென்ன புதுசா இருக்கு..! இனி விசேஷங்களில் மொய் வைக்க வந்துவிட்டது புது டெக்னிக்..

X
மொய்

மொய் வைக்க வந்துவிட்டது புது டெக்னிக்

Digital Transformation in Moi Virunthu : விருதுநகரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் மொய் வைக்க புதிய டெக்னிக் அறிமுகப்படுத்தப்பட்டது.

  • Last Updated :
  • Virudhunagar, India

திருமண வீடுகளில் மொய் எழுதுவதற்கு பதிலாக தற்போது மொய் விவரங்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் புதிய முறை திருமங்கலத்தை சேர்ந்த நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

விருதுநகரில் சமீபத்தில் நடந்த திருமண விழாவிற்கு சென்றிருந்தபோது மொய் எழுதும் இடத்தில் கணினிகள் வைக்கப்பட்டு வங்கி ஊழியர்களை 2 ஊழியர்கள் மொய் பணத்தை வாங்குவதும், அதை பணம் எண்ணும் இயந்திரத்தில் போட்டு சரி செய்வதுமாக இருந்தனர். இதென்ன புதுசா இருக்கு என்று கேட்டபோது அதற்கு பெயர் மொய் டெக் என்றனர்.

விஷேசங்கள் ஏற்பாடு செய்திருக்கும் உறவினர்கள் அதற்காக செய்திருக்கும் செலவில் பங்கு பெற அறிமுகம் செய்யப்பட்ட இந்த மொய் வைக்கும் முறை. நவீன உலகில் அனைத்தும் அனைத்தையும் நவீனமாக்கி வரும் டிஜிட்டல் உலகம், நோட்டுகளில் மொய் எழுதும் முறையையும் விட்டு வைக்கவில்லை.

மொய் வைக்க வந்துவிட்டது புதுடெக்னிக்

மொய் டெக் எனப்படும் இந்த டிஜிட்டல் முறையில் கம்ப்யூட்டரில் இதற்கென உருவாக்கப்பட்ட மென்பொருளில் மொய் வைப்பவரின் பெயர் , ஊர், உறவு முறை , தொகை உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து அதற்கான ரசீதையும் கையில் தருகின்றனர்.

பணம் எண்ணுவதற்கு மெசின் வைத்திருப்பதால் இங்கு தவறு நடக்க வாய்ப்பே இல்லை என்று கூறும் மொய் டெக் நிறுவனத்தை சேர்ந்த சரவணன், எல்லாம் முடிந்த பின்னர் மொய் விபரங்களை மொபைலில் ஏற்றி தருகிறோம்.அது போக மொய் விபரங்களை ஊர் வாரியாக அச்சிட்டு நோட்டாக தருவதால் நாம் யார் எவ்வளவு மொய் செய்தனர் என்ற விபரத்தை எளிதாக பார்க்கலாம் என்கிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஒரு விஷேசத்திற்கு மொய் வசூலிக்க ஒரு கணினியின் எண்ணிக்கை அடிப்படையில் ஒரு கணினிக்கு 3500 ரூபாய் கட்டணமாக பெற்று வருவதாக தெரிவித்தார். கணினி எண்ணிக்கை விஷேசத்திற்கு வரும் கூட்டத்தை பொருத்து மாறுபடும் என்றவர் முதலில் இதை மதுரையில் தொடங்கியதாகவும், நல்ல வரவேற்பு உள்ளதால் அருகில் உள்ள பகுதிகளுக்கும் செய்து தருவதாக தெரிவித்தார்.

மொய் டெக் சேவை பெற விரும்பினால் 82202 68241,81108 39402 என்ற எண்களை அழைக்கலாம்.

First published:

Tags: Local News, Virudhunagar