முகப்பு /விருதுநகர் /

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள்!

X
சதுரகிரி

சதுரகிரி

Sathuragiri : பங்குனி அமாவாசையை முன்னிட்டு புகழ்பெற்ற விருதுநகர் மாவட்டம் சதுரகிரி மலையில் பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் உள்ளபுகழ்பெற்ற சதுரகிரி மலையில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது புகழ்பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். இங்கு உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வந்து செல்கின்றனர். மாதந்தோறும் பௌர்ணமி அமாவாசை மற்றும் பிரதோஷம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி இம்மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மார்ச் 19ம் முதல் நேற்று (22ம் தேதி) வரை மலையேறலாம் என வனத்துறை அனுமதி வழங்கியிருந்தது.

இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி... 

இந்நிலையில், இந்த நாட்களில் காலை 7 மணி 12 மணி பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வந்தனர். இறுதி நாளான நேற்று (மார்ச் 22ம் தேதி) பக்தர்கள் மலையேறி அமாவாசை பூஜையை கண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆனால் வழக்கமான நாட்களை விட இந்த முறை கூட்டம் சற்று குறைவாகவே காணப்பட்டதாக கூறப்படுகிறது.

First published:

Tags: Local News, Virudhunagar