முகப்பு /விருதுநகர் /

மகா சிவராத்திரி 2023: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

மகா சிவராத்திரி 2023: சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி!

X
சதுரகிரி

சதுரகிரி மலை

Satthuragiri Hill Temple | புகழ்பெற்ற சதுரகிரி மலையில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு நேர பூஜைக்கு அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில். புகழ்பெற்ற இந்த ஆன்மீக தலத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்லும் நிலையில், அமாவாசை பெளர்ணமி மற்றும் பிரதோஷம் என மாதத்தில் எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் அமாவாசையை முன்னிட்டு வருகின்ற 18 ம் தேதி முதல் 21 ம் தேதி வரை பக்தர்கள் மலையேறி கோவிலுக்கு செல்லலாம் என்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பொதுவாக சதுரகிரி மலையில் ஆடி அமாவாசை, தை அமாவாசை , நவராத்திரி மற்றும் மகாசிவராத்திரி போன்ற நாட்கள் விஷேசமானது.அந்த நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அந்த வகையில் வருகின்ற 18 ம் தேதி மகாசிவராத்திரி கொண்டாடப்பட உள்ளதையொட்டி அன்று ஒரு நாள் மலையில் இரவு நேர பூஜைக்கு அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில், மகாசிவராத்திரிக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் அன்று ஒருநாள் மட்டும் நேரக்கட்டுபாடு இன்றி மலையேற அனுமதிக்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Maha Shivaratri, Sathuragiri, Virudhunagar