ஹோம் /விருதுநகர் /

ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி மலைக்கு செல்ல முடியாது..

ஐப்பசி மாத பிரதோஷம், பவுர்ணமிக்கு சதுரகிரி மலைக்கு செல்ல முடியாது..

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Sadhuragiri Sundaramahalingam Temple | விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியை ஒட்டி பக்தர்கள் மலைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Virudhunagar, India

  விருதுநகர் மாவட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு என தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் மட்டும் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

  இந்நிலையில், தற்போது வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்லும் பாதையில் உள்ள ஓடைகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

  Must Read : விழுப்புரத்தில் பிறந்து நடிப்புக்கே இலக்கணம் தந்து... சர்வதேச விருதை வென்ற நடிகர் - இவர் யார் தெரியுமா? 

  இதனால் ஐப்பசி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமியையொட்டி வருகிற 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என வனத்துறை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

  உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

  பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்பதால் மேற்கண்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு வர வேண்டாம் எனவும் பக்தர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

  Published by:Suresh V
  First published:

  Tags: Local News, Temple, Virudhunagar