ஹோம் /விருதுநகர் /

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை - வனத்துறை அறிவிப்பு

சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை - வனத்துறை அறிவிப்பு

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Sathuragiri Trekking | விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் உள்ள சதுரகிரி மலைக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது சதுரகிரி மலை. இது புகழ்பெற்ற ஆன்மிக தலமாக திகழ்கிறது. இந்த மலையில் ஏறுவதற்கு ஏதுவாக முதல் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் பக்தர்கள் கரடுமுரடான பாறைகளையும், பள்ளத்தாக்குகளையும், நீரோடைகளையும் கடந்து சென்று சிவபெருமானை தரிசிக்க வேண்டும்.

இந்த மலைக்கு மேலே சந்தன மகாலிங்கம், சுந்தர மகாலிங்கம், இரட்டை லிங்கம், காட்டு லிங்கம் மற்றும் மகாலிங்கம் என 5 சிவன் கோவில்கள் காணப்படுகின்றன. இவற்றை தரிசிக்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

பொதுவாக சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை, பவுர்ணமிக்கு தலா மூன்று நாட்கள், பிரதோஷத்திற்கு ஒரு நாள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் அமைந்துள்ள வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

Must Read : உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு ஏன் மேற்கூரை இல்லை தெரியுமா..?

இதனால், பிரதோஷம் மற்றும் தீபாவளி அமாவாசையை ஒட்டி வருகிற 22ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக வனத்துறையினர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் அறிவுறுத்தி உள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே பக்தர்கள் யாரும் அனுமதி மறுக்கப்பட்ட நாட்களில் தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன் வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Published by:Suresh V
First published:

Tags: Hill Stations, Local News, Virudhunagar