ஹோம் /விருதுநகர் /

மார்கழி அமாவாசையில் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி 

மார்கழி அமாவாசையில் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி 

மார்கழி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி 

மார்கழி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி 

மார்கழி அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் சதுரகிரி மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலை வெள்ளியங்கிரி மற்றும் பருவத மலைகளுக்கு இனையாக புகழ்பெற்றது. இந்த மலையின் மீது அமைந்துள்ள சுந்தர மகாலிங்கம்,சந்தன மகாலிங்கம் உட்பட 5 லிங்கங்களை தரிசனம் செய்ய தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் வந்து செல்வதுண்டு.

மலையேற்ற பாதை கடினமான ஒன்று என்பதாலும் வனத்தின் இயற்கைச்சூழலை கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாதமும் அமாவாசை பெளர்ணமி உட்பட எட்டு நாட்கள் மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: விருதுநகர் மாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் திருவிழா தேதி குறிப்பு.. 

இந்த நிலையில் 21.12.2022 மார்கழி பிரதோஷம் மற்றும் 23.12.2022 மார்கழி அமாவாசையை முன்னிட்டு டிசம்பர் 21 முதல் 24 வரையிலான நாட்களில் பக்தர்கள் மலையேற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் மேலே குறிப்பிட்ட நாட்களில் மழைப்பொழிவு இருப்பின் அனுமதி மறுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Devotees request govt, Local News, Tamil News, Temple, Virudhunagar