Home /virudhunagar /

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி.!

சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி.!

சதுரகிரி

சதுரகிரி

Virudhunagar District: சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் நான்கு நாட்கள் அனுமதி

    வைகாசி மாத பௌர்ணமி மற்றும் பிரதோஷத்தை ஒட்டி சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை முதல் நான்கு நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் மற்றும் வனத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    விருதுநகர் மாவட்டம் சாப்டூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலுக்கு மாதந்தோறும் பவுர்ணமி, அமாவாசையை முன்னிட்டு தலா 4 நாட்களுக்கு மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 15-ந்தேதி வைகாசி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகிற 13-ந்தேதி (வெ ள்ளிக்கிழமை) முதல் 16-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரி மலை கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு வழக்கத்தைவிட அதிக அளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளும் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களும் மலையேற அனுமதி இல்லை. காலை 7 மணி முதல் பகல் 11 மணி வரை மட்டுமே கோவிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட 4 நாட்களில் மழை பெய்ய வாய்ப்புகள் இருந்தால் அன்றைய தினம் பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் வனப்பகுதியில் எளிதில் தீப்பற்றும் பொருட்களை கொண்டு செல்ல கூடாது இரவு நேரங்களில் மலைப்பகுதியில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை போன்ற கட்டுப்பாடுகள் கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை சார்பில் விதிக்கப்பட்டுள்ளன.

    செய்தியாளர்:அ. மணிகண்டன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Virudhunagar

    அடுத்த செய்தி