முகப்பு /விருதுநகர் /

பட்டாசுகள் வாங்க இது தான் சரியான நேரம்.. விரைந்து வாங்க சிவகாசிக்கு..

பட்டாசுகள் வாங்க இது தான் சரியான நேரம்.. விரைந்து வாங்க சிவகாசிக்கு..

X
சிவகாசி

சிவகாசி பட்டாசுகள்

Sivakasi Crackers | தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் நினைவுக்கு வரும். தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் சிவகாசியில் இப்போதே பட்டாசு சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar | Sivakasi

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில வாரங்களே உள்ள நிலையில் இந்த தீபாவளிக்கு நிறைய புது ரக பட்டாசுகள் களம் காண உள்ளன. அவற்றின் விலை எவ்வாறு உள்ளது? பட்டாசு வாங்க எது சரியான நேரம் என்பதெல்லாம் பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். 

தீபாவளி என்றாலே பட்டாசு தான் முதலில் நினைவுக்கு வரும். தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கூட இல்லாத நிலையில் சிவகாசியில் இப்போதே பட்டாசு சீசன் களைகட்ட தொடங்கிவிட்டது.

ஏராளமான பட்டாசு கடைகள் தீபாவளிக்காக திறக்கப்பட்டுள்ளன. விருதுநகர் சிவகாசி சாலை, சாத்தூர் சிவகாசி சாலையில் ஏராளமான பட்டாசு கடைகள் காணப்படுகின்றன.

உச்ச நீதிமன்ற கட்டுப்பாடு, மூலப்பொருள் விலையேற்றம், போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் இந்தாண்டு பட்டாசு விலை சென்ற ஆண்டை விட 40 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

சிவகாசி பட்டாசுகள்

பட்டாசு விலை மற்றும் பட்டாசுகள் வாங்க சரியான நேரம் எது என்று சிவகாசி சூர்யா கிராக்கர்ஸ் உரிமையாளரிடம் பேசிய போது, இந்தாண்டு பட்டாசு விலை அதிகரித்துள்ளதாகவும், 1000 வாலா பட்டாசுகள் தடை செய்யப்பட்டுள்ளதால் அதற்கு மாற்றாக வேறு சில பட்டாசுகளும் மற்றும் சில புதிய ரக பட்டாசுகளும் வந்துள்ளதாக தெரிவித்தார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

தீபாவளி நெருங்க நெருங்க அடைமழை பிடிக்கும் என்பதால் பட்டாசு உற்பத்தி குறைந்து, பட்டாசு விலை தற்போதைய விலையை விட சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது. தீபாவளிக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ள நிலையில் தற்போதே பட்டாசுகளை வாங்கும் பட்சத்தில் விலையேற்றத்தை தவிர்த்து பணத்தையும் சேமிக்கலாம்.

பட்டாசுகள் வாங்க தொடர்புக்கு: சூர்யா கிராக்கர்ஸ், சிவகாசி 7402406111

செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்

First published:

Tags: Fire crackers, Local News, Sivakasi, Virudhunagar