முகப்பு /விருதுநகர் /

கடும் வெப்பம் எதிரொலி..! விருதுநகர் நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..!

கடும் வெப்பம் எதிரொலி..! விருதுநகர் நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்..!

X
விருதுநகர்

விருதுநகர் நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

Virudhunagar News : கோடை வெயில் காரணமாக விருதுநகர் குல்லூர் சந்தை நீர்த்தேக்கத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டத்தில் தினம் தினம் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் தினசரி வெப்பநிலை 100 டிகிரிக்கும் குறையாமல் பதிவாகி வருகிறது. கத்தரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் முடிவடைந்து விட்ட நிலையில் வெயில் மட்டும் குறையாமல் இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக மதிய வேளையில் அனல் காற்று வீசி வருவதால் மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது.

மேலும் கோடை வெயிலால் மாவட்டத்தில் பல நீர்நிலைகளில் நீர் வற்றி விட்ட நிலையில், விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை நீர்த்தேக்கத்தில் வெப்பம் காரணமாக மீன்கள் இறந்து நீரின் மேற்பரப்பில் மிதந்து வருகின்றன.

விருதுநகர் நீர்த்தேக்கத்தில் செத்து மிதக்கும் மீன்கள்

இந்நிலையில், கோடை காலம் தொடங்கியது முதல் நீர்த்தேக்கத்தில், நீரின் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் இதை தாங்க முடியாத மீன்கள் இப்படி இறந்து மிதப்பதாக கூறப்படும் நிலையில், இதேநிலை நீடித்தால் நீர்த்தேக்கத்தில் உள்ள மீன்கள் எண்ணிக்கை பாதிக்கப்படும் என்பதால் மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Virudhunagar