ஹோம் /விருதுநகர் /

கேட்டதோ..."புது ரோடு" கிடைத்ததோ "பேண்டேஜ் ".. அல்லல்படும் விருதுநகர் அல்லம்பட்டி பகுதி மக்கள்..

கேட்டதோ..."புது ரோடு" கிடைத்ததோ "பேண்டேஜ் ".. அல்லல்படும் விருதுநகர் அல்லம்பட்டி பகுதி மக்கள்..

X
விருதுநகர்

விருதுநகர் அல்லம்பட்டி

Virudhunagar News | விருதுநகர் அல்லம்பட்டி பகுதியில் சேதமடைந்து காணப்படும் சாலைகளுக்கு பதிலாக புது சாலை போட வேண்டும் என கோரப்பட்ட நிலையில், தற்போது பேண்டேஜ் ஒர் மட்டும் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் அல்லம்பட்டி முக்கு ரோடு மற்றும் விருதுநகர் சாத்தூர் சாலை இந்த இரண்டு பகுதிகளையும் இணைக்கும் சாலையாக உள்ளது அல்லம்பட்டி காமராஜர் பைபாஸ் சாலை‌. இச்சாலை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்டு பின்பு அப்படியே விடப்பட்டது. இதனால் சாலை சேதமடைந்து காணப்பட்டதால் புதிய சாலை அமைக்க வேண்டும் என அல்லம்பட்டி மக்கள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது அந்த சாலையில் சேதமடைந்த பகுதிகளுக்கு பேண்டேஜ் ஒர்க் மட்டும் செய்யப்பட்டுள்ளது. புதிய சாலை வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில், பேண்டேஜ் ஒர்க் மட்டும் செய்யப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மேலும் மழைக்காலம் வந்தவுடன் செய்யப்பட்டுள்ள பேண்டேஜ் வேலைகள் மீண்டும் சேதமடைய கூடும் என்பதால் புதிய சாலையை விரைந்து அமைக்க வேண்டும் என அல்லம்பட்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

First published:

Tags: Local News, Virudhunagar