முகப்பு /விருதுநகர் /

ஒரு மழைக்கு கூட தாக்குபிடிக்கல.. விருதுநகரில் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களில் சேதமடைந்த முக்கிய சாலை..

ஒரு மழைக்கு கூட தாக்குபிடிக்கல.. விருதுநகரில் புதுப்பிக்கப்பட்ட 15 நாட்களில் சேதமடைந்த முக்கிய சாலை..

X
சேதமான

சேதமான சாலை

Virudhunagar Meenambigai Bunglow Road : விருதுநகர் அருகே கடந்த 15 நாட்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்ட சாலை மீண்டும் சேதமடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் மீனாம்பிகை பங்களா அருகே உழவர் சந்தை எதிர்ப்புறம் உள்ள புல்லகக்கோட்டை செல்லும் சாலை நீண்ட நாட்களாக சேதமடைந்து , குண்டும் குழியுமாக இருந்து வந்தது. மதுரை செல்ல அனைத்து பேருந்துகளும் இந்த வழியாக செல்லும் நிலையில், பல கட்ட கோரிக்கைக்கு பின்னர் சாலையில் உள்ள பள்ளங்கள் மட்டும் பேட்ச் ஒர்க் செய்யப்பட்டு மூடப்பட்டன.

அதன் பின்னர் சில காலம் சாலை போக்குவரத்து சீராக இருந்து வந்த நிலையில், கடந்த வாரம் பெய்த மழையில் சாலையானது மீண்டும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறியுள்ளது.

சேதமான சாலை

ஒரு மழைக்கு கூட தாக்குபிடிக்காமல் சாலை சேதமடைந்தது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்கு மழைநீர் சாலையில் மழைநீர் தேங்குவது தான், முதலில் மழைநீர் செல்ல நல்ல வடிகால் அமைத்து விட்டு பின்னர் சாலை அமைக்க வேண்டும், நகராட்சி நிர்வாகம் அதை செய்யாமல் வெறும் சாலையை மட்டும் போட்டது தான் தவறு என்கிறார் முன்னாள் விருதுநகர் நகராட்சி துணை தலைவர் மாரியப்பன்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    தொடர்ந்து பேசிய அவர் இனியாவது முறையாக வடிகால் அமைத்து விட்டு சாலை போட வேண்டும் இல்லை என்றால் இதே நிலை தான் தொடரும் என்றார்.

    First published:

    Tags: Local News, Virudhunagar