முகப்பு /விருதுநகர் /

ரோட்டை காணோம்..! பள்ளங்களில் பயணம் செய்து வரும் அழகியநல்லூர் மக்கள்..!

ரோட்டை காணோம்..! பள்ளங்களில் பயணம் செய்து வரும் அழகியநல்லூர் மக்கள்..!

X
சேதமான

சேதமான அழகியநல்லூர் சாலை

Virudhunagar District News : விருதுநகர் அருகே அழகியநல்லூர் கிராமத்திற்கு செல்லும் சாலை மோசமான நிலையில் இருப்பதால் அப்பகுதி மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் இருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அழகியநல்லூர் கிராமம். அழகியநல்லூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களான கெப்பிலிங்கம்பட்டி, மாந்தோப்பு போன்ற ஊர்களை சேர்ந்த மக்கள் பல்வேறு பணிகளுக்கு விருதுநகர் வந்து செல்ல வேண்டியுள்ளதால் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விருதுநகர் அழகியநல்லூரை இணைக்கும் வகையில், மாந்தோப்பு- அழகிய நல்லூர் சாலை முதல் கெப்பிலிங்கம்பட்டி யூனியன் வரை சாலை அமைக்கப்பட்டது.

சேதமான அழகியநல்லூர் சாலை

தற்போது அந்த சாலையானது முற்றிலும் சேதமடைந்து பள்ளங்களாக மாறி, பள்ளங்களில் காணமல் போய்விட்டது. பள்ளங்களில் பயத்துடன் பயணித்து வரும் இப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் இந்த வழியே வருவதை முற்றிலும் தவிர்த்து விடுவதாக கூறுகின்றனர். கெப்பிலிங்கம்பட்டியை சேர்ந்த சண்முகம் பேசுகையில், தற்போது இந்த சாலையை விட்டால் 8 கிலோமீட்டர் சுற்றி பயணிக்க வேண்டும் எனவே இந்த சாலையை சீரமைத்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்தார்.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Virudhunagar