Home /virudhunagar /

90s கிட்ஸ்களின் ஃபேவரைட் குச்சி ஐஸ்களின் இன்றைய நிலை... விருதுநகரில் எங்கு கிடைக்கும்?

90s கிட்ஸ்களின் ஃபேவரைட் குச்சி ஐஸ்களின் இன்றைய நிலை... விருதுநகரில் எங்கு கிடைக்கும்?

குச்சி

குச்சி ஐஸ் ஞாபகம் இருக்கா?

Kuchi Ice at Virudhunagar | அக்காலத்து ஐஸ்களை இன்றும் தயாரித்தும் வரும் விருதுநகர் சிவன் ஐஸ் கம்பெனி குறித்தும் இன்றைய காலகட்டத்தில் குச்சி ஐஸ்களுக்கான வரவேற்பு குறித்தும் விவரிக்கிறது இந்த சிறப்பு தொகுப்பு..

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
ஐஸ்கிரீம் சாப்பிடலாம் என்ற எண்ணம் தோன்றினாலே பல பிராண்டுகளில் விதவிதமாக வரும் ஐஸ்கிரீம்களை நாடிச் செல்லும் 2K கிட்ஸ்களுக்கு, அன்றைய சேமியா, டபுள் கலர் ஜவ்வரிசி ஐஸ்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

அன்று விடுமுறை நாட்களில் ஊருக்குள் ஐஸ் வண்டி வந்தாலே கூட்டமாய் வந்து டம்ளரில் வாங்கி சென்று ஐஸ்களை ருசித்த 90ஸ் கிட்ஸ்களுக்கே தெரியும் இதன் அருமை. அதிலும் டபுள் கலர் ஐஸ்க்கும், பால் ஐஸ்ஸூக்கும் சற்று கிராக்கி இருக்கும்.

90ஸ் கிட்ஸ் வளர வளர அவர்களின் இளமை காலம் போல இந்த குச்சி ஐஸ்களின் காலமும் முடிந்து விட்டது. இன்று இந்த வகை ஐஸ்களை   பார்ப்பதே அரிதாகிவிட்டது. இத்தகைய ஐஸ்களை தேடிய போது விருதுநகரில் சிவன் ஐஸ் கம்பெனி நடத்தி வரும் முருகன்  நம் கண்ணில் பட்டார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

விருதுநகரில் 30 ஆண்டுகளாக ஐஸ் தயார் செய்து வரும் முருகன் கூறுகையில், முதலில் இதில் பல்வேறு வகையான ஐஸ்கள் செய்யப்பட்டு வந்த நிலையில் இன்று விற்பனை குறைவால் ஜவ்வரிசி ஐஸ்கள் மட்டுமே தயாரித்து வருவதாக தெரிவித்தார்.
விற்பனை இல்லாததால் இதனை நம்பி தொடங்கப்பட்ட ஐஸ் கம்பெனிகள் பல மூடப்பட்டு விட்டன. சில நவீன கால ஐஸ்கிரீம் தயாரிப்பில் இறங்கிவிட்டன.

ஆக மொத்தத்தில் இந்த ஐஸ் ரகங்கள் மறைய தொடங்கிவிட்டன என்பது மட்டும் புரிகிறது. உங்கள் கண்ணில் இவ்வகை சேமியா ஐஸ்கள் சிக்கினால், நிச்சயம் ஒரு முறை சாப்பிட்டு பாருங்க..!!
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி