முகப்பு /விருதுநகர் /

சமுதாயக்கூடம் வேண்டி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதி தமிழர் கட்சியினர்!

சமுதாயக்கூடம் வேண்டி விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆதி தமிழர் கட்சியினர்!

X
ஆட்சியர்

ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை

தங்களுக்கு சமுதாய கூடம் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  • Last Updated :
  • Virudhunagar, India

சமுதாய கூடம் அமைத்து தராத நிர்வாகத்தை கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் வட்டம், சிங்கம்மாள்புரம் கிராமத்தில் அமைந்துள்ள ரைட்டன்பட்டி தெருவில் அரசு சார்பில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்ட பொதுப் பயன்பாட்டு நிலம் உள்ளது. இதில் ஆதிதிராவிடர் நலத்துறையின் மாணவியர் விடுதி கட்டியது போக மீதம் இருக்கும் இடத்தில், தங்களுக்கு சமுதாய கூடம் அமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் மக்களின் இந்த கோரிக்கை மீது எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், நிர்வாகத்தை கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில் கடந்த மே 8 ம் தேதியன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டம்

இதில் கலந்து கொண்ட போராட்ட குழுவினர், தங்கள் பகுதியில் குடியிருக்கும் மக்கள், கடந்த நாற்பது ஆண்டுகளாக சமுதாயக்கூடம் இன்றி தவித்து வருவதாகவும், இது தொடர்பாக பலமுறை கோரிக்கை வைத்தும் அரசு செவி சாய்க்கவில்லை என்று கண்டன கோஷங்களை எழுப்பினர்‌. இதில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு உடன் கண்டன கோஷங்களை எழுப்பினர்‌.

top videos
    First published:

    Tags: Local News, Virudhunagar