முகப்பு /விருதுநகர் /

விருதுநகரில் பங்குனி பொங்கலுக்கு தயாராகி வரும் மண் பொம்மைகள்.. சிறப்புகள் என்ன?

விருதுநகரில் பங்குனி பொங்கலுக்கு தயாராகி வரும் மண் பொம்மைகள்.. சிறப்புகள் என்ன?

X
பங்குனி

பங்குனி பொங்கலுக்கு தயாராகும் பொம்மைகள்

Virudhunagar News : விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மண் பொம்மைகள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறன.

  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழாவின்போது, பக்தர்கள் ஆண், பெண் , குழந்தை போன்ற மண்ணால் செய்யப்பட்ட உருவ பொம்மையை வாங்கி வைத்து நேர்த்தி கடன் செலுத்துவர். அவ்வாறு பொம்மை வாங்கி வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கல் திருவிழாவின்போது இந்த மண் பொம்மைகளை அதிக அளவில் கோவில் வளாகத்தில் காணமுடியும். அந்த வகையில் இந்த ஆண்டு பங்குனி பொங்கலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், பொம்மைகள் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

பங்குனி பொங்கலுக்கு தயாராகும் பொம்மைகள்

வித விதமான பொம்மைகள் :

விருதுநகர் சுற்றுவட்டார கிராமங்களில் இந்த பொம்மைகள் தயாரிக்கும் பணி 6 மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும் நிலையில், பொங்கல் வருவதற்கு ஒரு மாதம் முன்பு வியாபாரிகள் இந்த பொம்மைகளை விருதுநகருக்கு கொண்டு வந்து வண்ணம் தீட்டி மார்க்கெட்டில் விற்பனைக்கு வைப்பர்.

இதையும் படிங்க : காவல் நிலையமா.. குழந்தைகள் பூங்காவா? பொதுமக்களின் பாராட்டை பெற்றுவரும் சிவகாசி மாரனேரி போலீசார்!

ஆண், பெண் பொம்மை, குழந்தை பொம்மை, கை கால் பொம்மை மற்றும் வீடு பொம்மை என அவரவர் வேண்டுதல்களுக்கு ஏற்ப வித விதமான வடிவங்களில் தயாராகி வரும் பொம்மைகளை வாங்கி வைத்து வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்கின்றனர் வியாபாரிகள். உதாரணமாக குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பொம்மையும், கால் கை நலம் பெற வேண்டுவோர் கை கால் உருவ பொம்மையும் வாங்கி வைக்கலாம் என்கின்றனர்.

பங்குனி பொங்கலுக்கு தயாராகும் பொம்மைகள்

top videos

    பொதுவாக விருதுநகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மாரியம்மன் கோவில்களில் இந்த பொம்மைகள் வைத்து வழிபடும் பழக்கம் இருந்து வரும் நிலையில், விருதுநகர் மாரியம்மன் கோவிலில் அதிக அளவில் பொம்மைகள் வாங்கி வைத்து வழிபடும் பழக்கம் இருக்கிறது. அதனால் தான், ஒவ்வொரு ஆண்டும் பங்குனி பொங்கலுக்கென பிரத்தியேகமாக பொம்மைகளை தயாரித்து வருவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

    First published:

    Tags: Local News, Virudhunagar