ஹோம் /விருதுநகர் /

விருதுநகரில் குழந்தை பருவ புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு - கவனத்துடன் கேட்டறிந்த மாணவிகள்!

விருதுநகரில் குழந்தை பருவ புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு - கவனத்துடன் கேட்டறிந்த மாணவிகள்!

விருதுநகரில்

விருதுநகரில் குழந்தை பருவ புற்றுநோய்கள் குறித்து விழிப்புணர்வு

Virudhunagar District News : விருதுநகரில் ANT அறக்கட்டளை மற்றும் விருதுநகர் லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பருவ புற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வு நடை பெற்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகரில் ANT அறக்கட்டளை மற்றும் விருதுநகர் லயன்ஸ் கிளப் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு குழந்தை பருவ புற்றுநோய்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது.

விருதுநகர் நகராட்சி தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10.11.2022 அன்று ANT கல்வி, மருத்துவம், சமூக மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் விருதுநகர் அரிமா சங்கத்தின் சார்பாக மாணவர்களுக்கு குழந்தை பருவத்தில் ஏற்படும் புற்றுநோய்கள் பற்றி விழிப்புணர்வு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் உதவி தலைமையாசிரியை, “இக்காலத்தில் குழந்தைகளுக்கு குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்ப பை வாய் புற்றுநோய் பற்றிய புரிதல் இல்லை. அதற்காகவே இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் படிங்க : `பாலே இங்க தேறல, பாயாசம் கேக்குதா..! - 'மழை லீவ் கேட்டவருக்கு விருதுநகர் ஆட்சியரின் நச் பதில்

நிகழ்வில் பேசிய ஏ.என்.டி அறக்கட்டளை தலைவர் டாக்டர் தி.ஜெயராஜ சேகர் பல்வேறு புற்றுநோய்களை பற்றியும் அவற்றை எப்படி குணப்படுத்துவது மற்றும் வராமல் எப்படி பாதுகாப்பது என்பது பற்றி மாணவிகளுக்கு விளக்கினார்.

இதுகுறித்து பேசிய தங்கம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பல்வேறு வகையான புற்றுநோய்கள் பற்றியும் அது எவ்வாறு ஏற்படுகிறது என்பது பற்றி இந்நிகழ்வு வாயிலாக தெரிந்து கொள்ள முடிந்தது என்றும். புற்றுநோயும் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால் குணப்படுத்தலாம் என்பதை தெரிந்து கொண்டதாகவும் கருத்து தெரிவித்தனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar