முகப்பு /விருதுநகர் /

தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கம், சிலம்ப பயிற்சி! மாஸ் காட்டி வரும் விருதுநகர் தலைமையாசிரியர்!

தொடக்க பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கம், சிலம்ப பயிற்சி! மாஸ் காட்டி வரும் விருதுநகர் தலைமையாசிரியர்!

X
மாஸ்

மாஸ் காட்டி வரும் விருதுநகர் தலைமையாசிரியர்

Virudhunagar News : ஆரம்ப பள்ளியிலேயே மாணவர்களுக்கு செஸ், சிலம்ப பயிற்சி அளித்து அவர்களின் திறமையை வெளிப்படுத்தி அசத்தி வரும் விருதுநகர் மாவட்ட ஆசிரியர் அனைவரின் பாராட்டை பெற்றுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே உள்ள கிராமம் அலமேலுமங்கைபுரம். காலநிலை அடிப்படையில் சற்று வெப்பமண்டல பகுதியான இந்த ஊரில் பெரும்பாலான மக்கள் பட்டாசு ஆலைகளில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களின் குழந்தைகள் அலமேலுமங்கைபுரம் அரசு ஆரம்ப பள்ளியில் படித்து வருகின்றனர். அரசுப்பள்ளியாக இருந்தாலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இனையாக சீருடை, அரசுப்பள்ளி முத்திரை பதித்த பெல்ட் மற்றும் டை என மிடுக்கோடு சுற்றி வருகின்றனர்.

இதெல்லாம் அப்பள்ளியில் தலைமையாசிராக பணிபுரிந்து வரும் நாடியம்மாளின் ஐடியா என பேசப்பட்டு வருகிறது. மேலும் வெறும் படிப்போடு இருந்து விடாமல் கல்வி சாரா செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் தரும் நாடியம்மாள், வெளியில் இருந்து பயிற்சியாளர்களை கொண்டு மாணவர்களுக்கு செஸ், சிலம்பம் போன்ற விளையாட்டுகளை கற்பித்து வருகிறார். இவரின் இந்த முயற்சியால் பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்து இப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் அதிக கவனம் பெறவே இதெல்லாம் கேள்விபட்ட மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து ஆசிரியர் நாடியம்மாளிடம் பேசியபோது, “ஆட்சியர் தன்னை நேரில் அழைத்து பாராட்டியது மகிழ்ச்சி. இதற்கு முன்னதாக நல்லாசிரியர் விருது, தமிழக அரசின் சிறந்த பள்ளி விருது, மத்திய அரசின் தூய்மை பள்ளி போன்ற விருதுகளை பெற்றுள்ளேன். இதெல்லாம் எனக்கான பொறுப்பை மேலும் அதிகரித்துள்ளது. இன்னும் என்னால் இயன்ற அளவு பள்ளிக்காக உழைப்பேன்” என்று தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar