Home /virudhunagar /

விருதுகால்பட்டி விருதுநகர் ஆனது எப்படி? சுருக்கமான வரலாறு தெரிந்து கொள்ளலாமா?

விருதுகால்பட்டி விருதுநகர் ஆனது எப்படி? சுருக்கமான வரலாறு தெரிந்து கொள்ளலாமா?

விருதுநகர்

விருதுநகர் வரலாறு

Virudhukalpatti @ Virudhunagar | விருதுநகர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் என்பது நம் அனைவருக்கும் தெரியும் ஆனால் அதே விருதுநகரின் வரலாறு பற்றியும், அதற்கு ஏன் விருதுநகர் என்ற பெயர் வந்தது என்று கேட்டால் ஒருவரிடமும் பதில் இருக்காது. விருதுநகர் வரலாறு பற்றி அறிவோம்..

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India
விருதுநகர் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஊர் என்பது  அனைவருக்கும் தெரியும். ஆனால் அதே விருதுநகரின் வரலாறு பற்றியும், அதற்கு ஏன் விருதுநகர் என்ற பெயர் வந்தது என்று கேட்டால் ஒருவரிடமும் பதில் இருக்காது. விருதுநகர் வரலாறு பற்றியும் அதன் பெயர் காரணம் பற்றியும் இப்பதிவில் காணலாம்.

விருதுநகரின் பழமைக்கு சான்று:

விருதுநகரின் வரலாறு இன்று நேற்றோ தொடங்கவில்லை. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை உறுதிபடுத்தும் விதமாக நகரின் மைய பகுதியில் பாண்டிய மன்னன் கட்டிய பழமை வாய்ந்த சிவன் கோயில் ஒன்று உள்ளது. இதை வைத்து பார்த்தால் இங்கு பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை புரிந்து கொள்ளலாம்.

விருதுகால்பட்டி:

தொடக்கத்தில் விருதுநகர், விருதுகால்பட்டி என்றே அழைக்கப்பட்டது. அதற்கு காரணமாக சிறு கதையும் சொல்லப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பல ஊர்களை வென்று விருது கொடிகளை பெற்ற மாவீரன் ஒருவன் இவ்வூர் மக்களை பார்த்து இவ்வூரில் என்னை வெற்றி கொள்ள எவரேனும் உள்ளரா? என் கேட்டான். இந்த ஊர் மக்களும் அவனோடு போரிட்டு வெற்றி கொண்டு அவனின் விருது கொடிகளை கைப்பற்றினர். இதனால் அன்று முதல் விருதுகால்பட்டி என அழைக்கப்பட்டு பின்னர் அதுவே விருதுபட்டி என்று மாறியது.

இதையும் படிங்க:  பளியர் இன மக்களை தேடி மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி ஒரு பயணம்...

விருதுநகர்:

முன்பு ஒருங்கிணைந்த மதுரை மாவட்டத்தில் இருந்த விருதுபட்டி பின்னர் இராமநாதபுரம் பிரிக்கப்பட்டு அதனுடன் சில காலம் இருந்தது.
1923ல் வெள்ளையர்கள் ஆட்சி காலத்தில் இங்கு வணிகம் அதிகம் நடைபெற்றதால் இதன் முக்கியத்துவம் கருதி விருதுபட்டி விருதுநகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

இதையும் படிங்க:  நல்லதங்காள் பிறந்த விருதுநகர் அர்ஜூனாபுரம் கிராம கோவிலுக்கு ஒரு பயணம்.. இந்த கிணற்றில் தான் தற்கொலை செய்தாரா?

விருதுநகர் மாவட்டம்:

1985ல் இராமநாதபுரம் மூன்றாக பிரிக்கப்பட்டு விருதுநகர், இராமநாதபுரம், சிவகங்கை என மூன்று மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. விருதுநகர், சிவகாசி, இராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி ஆகிய பகுதிகளை உள்ளடக்கி விருதுநகர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இப்படி பல ஆண்டு வரலாற்று பின்னணி கொண்ட விருதுநகரின் பெருமைகள் யாருக்கும் தெரிவதில்லை. காமராஜர் பிறந்ததும் இங்கு தான், மொழிப்போர் தியாகி சங்கரலிங்கனார் பிறந்ததும் இங்கு தான். விருதுநகர் ஓர் வியாபார நகரம் ஏலக்காய் கிராம்பு பொருட்களுக்கு இன்றும் இங்கு தான் விலை நிர்ணயம் செய்யப்படுகின்றன.இத்தனை பெருமைகளை கொண்டுள்ள நம் ஊரை பற்றி முதலில் நாம் தெரிந்து கொண்டு அதை மற்றவர்களுக்கும் கொண்டு போய் சேர்ப்போம்.
Published by:Arun
First published:

Tags: Local News, Virudhunagar

அடுத்த செய்தி