ஹோம் /விருதுநகர் /

பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்லமுடியுமா? - வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

பக்தர்கள் சதுரகிரி மலைக்கு செல்லமுடியுமா? - வனத்துறை விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சதுரகிரி மலை

சதுரகிரி மலை

Virudhunagar District | விருதுநகர் மாவட்டம் சதுரகிரியில் உள்ள சுந்தரமகாலிங்க சாமியை பவுர்ணமியை ஒட்டி தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

  • Local18
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்க சுவாமி கோயில். இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

இந்த கோவில் அடர் வனப்பகுதியில் இருப்பதால், சாமி தரிசனம் செய்ய வனத்துறையினரிடம் அனுமதி பெற்ற செல்ல வேண்டும். தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுகின்றனர்.

இரவில் கோவிலில் தங்க அனுமதி கிடையாது. கோயிலுக்கு செல்லும் மலைப்பாதைகளில் உள்ள நீரோடை பகுதிகளில் பக்தர்கள் இறங்கி குளிப்பதற்கும் அனுமதி கிடையாது. வனப்பகுதி பாதுகாப்பை கருத்தில் கொண்டு, பக்தர்கள் உணவு சமைத்து சாப்பிடுவதை தவிர்த்து கோயில் சார்பில் வழங்கப்படும் அன்னதானத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இந்நிலையில், மாதம்தோறும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களையொட்டி சதுரகிரிக்கு மலை ஏறி சென்று சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுதி வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கோவில் அமைந்துள்ள மலைப்பகுதியில் சாரல் மழை நேற்று பெய்தது. இதனால் பாதுகாப்பு கருதி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதனால், தாணிப்பாறை வனத்துறை கேட்டின் முன்பு நின்று பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்ப சென்றனர். பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Must Read : கன்னியாகுமரிக்கு டூர் போறீங்களா? அழகான இந்த அருவியை மிஸ் பண்ணாதீங்க!

இந்நிலையில், இன்று (வெவ்வாய் கிழமை) காலை முதல் சதுரகிரி மலைக்குச் சென்று சுந்தரமகாலிங்க சுவாமியை தரிசிக்க வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் மலையேறி சாமியை தரிசித்து வருகின்றனர்.

First published:

Tags: Local News, Temple, Virudhunagar