ஹோம் /விருதுநகர் /

பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா? இந்த எண்ணை அழையுங்கள்..!

பொங்கல் பரிசு தொகுப்பில் குறையா? இந்த எண்ணை அழையுங்கள்..!

பொங்கல் பரிசு

பொங்கல் பரிசு

Virudhunagar pongal gift issue | பொங்கல் பரிசுப்பொருட்கள் தொகுப்பில் குறைகள் ஏதும் இருப்பின் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar

பொங்கல் பரிசுப்பொருட்கள் தொகுப்பில் குறைகள் ஏதும் இருப்பின் புகார் தெரிவிக்க தொலைப்பேசி எண்கள் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாளன பொங்கல் திருவிழாவிற்கு தமிழ்நாடு அரசு சார்பில் பொதுமக்களுக்கு பச்சரிசி, வெல்லம் போன்ற பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இத்தொகுப்புடன் பணம் வழங்கப்பட்டு வந்த நிலையில், கடந்த ஆண்டு பரிசு பொருட்கள் அடங்கிய தொகுப்பு மட்டும் வழங்கப்பட்டது. இதில் சில பொருட்களின் தரம் குறைவாக இருந்தாக சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்களோடு ரொக்கமாக ரூபாய் 1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, இதற்கென டோக்கன்கள் ரேசன் கடைக்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு ஜனவரி 9ம் தேதி முதல் பரிசு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

பொங்கல் பரிசு பொருட்கள் பெறுவதில் ஏதேனும் புகார் இருப்பின் அதை மாவட்ட கட்டுபாட்டு மையத்திற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விருதுநகர் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் பொங்கல் பரிசு பொருட்கள் பெறுவதில் புகார் இருப்பின் அவர்கள் 04562 252397 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Pongal 2023, Pongal Gift, Virudhunagar