ஹோம் /விருதுநகர் /

சாத்தூர் ஸ்நாக்ஸ்-ல் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை அமோகம்.. ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்..!

சாத்தூர் ஸ்நாக்ஸ்-ல் கிறிஸ்துமஸ் கேக் விற்பனை அமோகம்.. ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்..!

X
கிறிஸ்துமஸ்

கிறிஸ்துமஸ் கேக் விற்பனை அமோகம்

Virudhunagar District News : கிறிஸ்துமஸ் நெருங்கி விட்டதால் கேக் விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

ஆங்கில மாதமான டிசம்பர் வந்தாலே அதில் வரும் கடும் குளிரும், அதில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையும், புத்தாண்டும் தான் அனைவரின் நினைவில் இருக்கும்.

இந்தாண்டு டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ்க்கு இன்னும் சில நாட்களே உள்ளன. பொதுவாகவே கிறிஸ்துமஸ் என்றாலே கேக் தான் அதில் முக்கியமான ஒரு இடத்தை பெறும்.

கிறிஸ்துமஸ் வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பே கேக் ஆர்டர்கள் பேக்கரிக்கு வர தொடங்கிவிடும், அப்போதே அதற்கான விற்பனையும் தொடங்கிவிடும்.

அதிலும் கிறிஸ்துமஸ் சமயத்தில் பெரும்பாலும் ப்ளம் கேக்குகளின் விற்பனை தான் அதிகமாக இருக்கும் என்கின்றனர். சாத்தூர் பகுதியில் 30 ஆண்டுகளாக இனிப்புகள் தயாரித்து வரும் சாத்தூர் ஸ்நாக்ஸ் நிறுவனத்தினர்.

இதையும் படிங்க : மார்கழி அமாவாசையில் சதுரகிரி மலையேற பக்தர்களுக்கு அனுமதி

ப்ளம் கேக் :

கிறிஸ்துமஸ் என்றாலே ப்ளம் கேக் தான் என்ற அவர்கள் இதற்கென இரண்டு மாதங்களுக்கு முன்பே பழங்களை எடுத்து வைத்து தயார் செய்து வருவதாக தெரிவித்தனர்.

மேலும் வாடிக்கையாளர் தேவைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் தயாரித்து வருவதாக தெரிந்தவர்கள்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

கிறிஸ்துமஸ் கிறிஸ்துமஸ்காக கேக்குகள் ஆன்லைன் ஆர்டர்கள் மூலம் டோர் டெலிவரி செய்து வருவதாகவும், இதற்கென கிறிஸ்துமஸ் முதல் நியு இயர் வரை கேக் விற்பனை நடைபெறும் என்று கூறினர்.

First published:

Tags: Local News, Virudhunagar