Home /virudhunagar /

மாவட்ட தலைநகராக இருந்தும் விருதுநகரில் இப்படி ஒரு பிரச்னை இருக்கே.. பேருந்து நிலையம் வராத பேருந்துகளால் மக்கள் அவதி..

மாவட்ட தலைநகராக இருந்தும் விருதுநகரில் இப்படி ஒரு பிரச்னை இருக்கே.. பேருந்து நிலையம் வராத பேருந்துகளால் மக்கள் அவதி..

விருதுநகரில்

விருதுநகரில் இப்படி ஒரு பிரச்னை இருக்கே..

Virudhunagar Bus Stand : விருதுநகரில் வெளியூர்  பேருந்துகள் பேருந்து நிலையம் செல்லாமல் சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Virudhunagar | Virudhunagar
    விருதுநகரில் வெளியூர் பேருந்துகள் பேருந்து நிலையம் செல்லாமல் சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றன. இதனால் பொதுமக்கள் இன்னலை சந்தித்து வருகின்றனர்.

    மதுரையிலிருந்து தெற்கு நோக்கி செல்லும் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி பேருந்துகள் விருதுநகர் வழியாகவே சென்றாலும், நகருக்குள் வராமலே தேசிய நெடுஞ்சாலையில் சென்றுவிடுகின்றன. இதனால் விருதுநகரில் இறங்க வேண்டிய பயணிகளை விருதுநகர் பி.ஆர்.சி டெப்போவிலும், கலெக்டர் அலுவலகத்திலும் நிறுத்துவிட்டு செல்கின்றனர்.

    தற்போது சிவகாசி பேருந்துகள் மட்டுமே விருதுநகர் உள்ளே வந்து செல்கின்றன. இரவு நேரத்தில் இந்த பேருந்துகளின் எண்ணிக்கையும் குறைக்கப்படுவதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். தெற்கிலிருந்து வரும் போது நாகர்கோவில், திருநெல்வேலி பேருந்துகளில் விருதுநகர் பி.ஆர்.சி டெப்போவிலே இறங்கி கொள்ள சம்மதித்து ஏறினாலும், அவர்களிடம் திருமங்கலம் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இல்லையென்றால் விருதுநகர் பயணிகள் ஏற வேண்டாம் என நடத்துநர்கள் கூறிவிடுகின்றனர்.

    வடக்கிலிருந்து தெற்கு செல்லும் பேருந்துகளிலும் இதே நிலை தான். இரவு நேரத்தில் வெளியூரில் இருந்து வரும் பயணிகள் திரும்பி வீடு செல்ல சிரமப்பட்டு வருகின்றனர்.நெடுஞ்சாலை என்பதால் எந்நேரமும் வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்படி நடு ரோட்டில் பேருந்துகள் நிறுத்தப்படுவதால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    இது தொடர்பாக பலமுறை மாவட்ட தலை நகராக இருந்தும் பேருந்து வசதி இல்லாமல் இருப்பது கவலை அளிக்கிறது. இது தொடர்பாக பல கோரிக்கை வைத்தும் எந்த முன்னேற்றமும் இல்லை. அனைத்து வெளியூர் பேருந்துகளும் விருதுநகருக்குள் குறிப்பாக புதிய பேருந்து நிலையம் வந்து செல்ல வேண்டும் என்பதே விருதுநகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.

    செய்தியாளர் : அழகேஸ்வரன், விருதுநகர்
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Virudhunagar

    அடுத்த செய்தி