முகப்பு /விருதுநகர் /

இண்டர்லாக்கிங் கல்லில் வீடு கட்டினால் செலவு இவ்வளவு குறையுமா? விருதுநகரில் ஒரு செம்ம வீடு..!

இண்டர்லாக்கிங் கல்லில் வீடு கட்டினால் செலவு இவ்வளவு குறையுமா? விருதுநகரில் ஒரு செம்ம வீடு..!

X
இண்டர்லாக்கிங்

இண்டர்லாக்கிங் கல்

Interlock Brick House | பெரிய பெரிய செங்கற்களை அதனுள் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி லாக் செய்து சிமெண்ட் கலவை இன்றி சுவர் எழுப்பி வீடு கட்டுவதன் மூலம் சாதரணமாக வீடு கட்டும் செலவை குறைக்கலாம் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

வீட்டை கட்டிப்பார் கல்யாணத்தை முடித்து பார் என்பார்கள்.. அன்றைய கால கட்டத்தில்.. இது அந்த காலத்திற்கு எந்த அளவிற்கு பொருந்துகிறதோ இல்லையோ இன்றைய காலத்திற்கு நன்றாக பொருந்துகிறது. காரணம் வீடு கட்ட ஆகும் பொருட் செலவு, கட்டுமான பொருட்களின் விலையேற்றத்தால சாதாரண ஒரு மனிதர் வீடு கட்ட வேண்டும் என்றால் அதிக செலவு செய்ய வேண்டியுள்ளது. அப்படி இருக்கையில் குறைந்த செலவில், விருதுநகர் அருகே முதல் முறையாக இன்டர்லாக் முறையை பயன்படுத்தி வீட்டை கட்டியுள்ளார் வெயிலான் ரமேஷ் என்பவர்.

இன்டர்லாக் முறை :

இந்த முறையில் பெரிய பெரிய செங்கற்களை அதனுள் இருக்கும் இடைவெளியை பயன்படுத்தி லாக் செய்து சிமெண்ட் கலவை இன்றி சுவர் எழுப்பி வீடு கட்டுவதன் மூலம் சாதரணமாக வீடு கட்டும் செலவை குறைக்கலாம் என்று கூறுகின்றனர் வல்லுநர்கள்.

இதுகுறித்து பேசிய வீட்டின் உரிமையாளர், “சொந்தமாக வீடு கட்டலாம் என இருந்தபோது , சிமெண்ட் விலை, மணல் விலை மற்றும் வேலையாட்கள் கூலி ஆகியவற்றை மனதில் வைத்து தயங்கி வந்தேன். அப்போது ஈரோட்டில் இருக்கும் ஒரு பொறியாளர் ஆலோசனைப்படி இம்முறையில் வீடு கட்டினேன். சிமெண்ட் இன்றி செங்கற்களை அப்படியே அடுக்கி வைத்து சுவர் எழுப்புவதன் மூலம் வீட்டை வேகமாக கட்டுவதோடு, வேலையாட்களின் தேவை மற்றும் கட்டுமான செலவு ஆகியவற்றையும் குறைக்க முடியும்.

மேலும் இந்த இன்டர்லாக் முறையில் கட்டப்பட்ட இந்த வீட்டில் வெப்பநிலை குறைந்து காணப்படுவதாகவும், வழக்கத்தை விட மாறாக புதிய முறையை பின்பற்றி கட்டப்பட்ட வீடு என்பதால் பார்க்க அழகாக கவரும் விதமாக இருக்கிறது” என அவர் தெரிவித்தார்.

First published:

Tags: Local News, Virudhunagar