முகப்பு /விருதுநகர் /

பெண்களுக்கு அதிகளவு புற்றுநோய் பாதிப்பு- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர் விளக்கம்

பெண்களுக்கு அதிகளவு புற்றுநோய் பாதிப்பு- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மருத்துவர் விளக்கம்

X
விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சி

Virudhunagar | விருதுநகர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையான 1.323 பேரில் பெண்களின் எண்ணிக்கை 703 ஆகும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் மாணவிகளுக்கு மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீஎஸ்.ராமசாமி நாயுடு கல்லூரியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சாமுவேல் நினைவு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி முதல்வர் கணேஷ்ராம் தலைமையில் நடைபெற்ற இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை இக் கல்லூரியின் விரிவாக்கத் திட்ட இயக்குனர் K.அருணேஷ் தொடங்கி வைத்தார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தலைமையுரை நிகழ்த்திய மருத்துவர் கணேஷ்ராம், ‘இந்த விழிப்புணர்வு நிகழ்வை ஏற்பாடு செய்த குழுவினரை பாராட்டியதோடு இது போன்ற நிகழ்வுகள் அனைத்து மகளிருக்கும் சென்றடைய வேண்டிய அவசியத்தினை எடுத்துரைத்தார்.

பின்னர் தமிழகத்தில் புற்றுநோய் விழிப்புணர்வின் அவசியம் குறித்து பேசிய மருத்துவர் அருணேஷ், ‘இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நோய் பாதிப்பினைக் குறைக்கவும் பாதிப்பு ஏற்படும் போது செய்யப்படும் தேவையற்ற சிகிச்சையினைத் தவிர்க்கவும் உதவும் என்று கூறினார்.

மருத்துவர் ஜெயராஜசேகர் பேசும்போது, ‘பழக்கத்தில் ஏற்பட்ட மாற்றம், அதிகரித்துவரும் சோம்பேறித்தனம், விளையாட்டுகளில் ஈடுபாடு குறைதல், சுற்றுப்புறச் சூழ்நிலையில் ஏற்படும் மாசு மற்றும் புகையிலை பயன்பாடு ஆகியவை புற்றுநோய் ஏற்படுத்தும் காரணிகள் என விவரித்தார்.

தமிழ்நாடு புற்றுநோய் பதிவுத் திட்டம் 2017ஆம் ஆண்டு தரவின்படி, ‘விருதுநகர் மாவட்டத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையான 1,323 பேரில் பெண்களின் எண்ணிக்கை 703 என்றும் பாதிக்கப்பட்ட பெண்களில் அதிகபட்சமாக மார்பகப் புற்றுநோயினால் 165 பேரும் கருப்பை வாய் புற்றுநோயினால் 143 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார். முப்பது வயதிற்கு மேல் குறிப்பிட்ட இடைவெளியில் சுய பரிசோதனைகள், மெமோகிராம் பரிசோதனைகள் மற்றும் மருத்துவரிடத்தில் ஆலோசனைகள் அவசியம் செய்துகொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மாணவிகளுக்கு தி.ஜெயராஜசேகர்  எழுதிய  ‘மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கையேடு’ வழங்கப்பட்டது.

நரபலிக்கு பயந்து தமிழ்நாட்டில் தஞ்சமடைந்த மாணவி.. பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தில் மனு!

இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் 150க்கும் அதிகமான மாணவிகள் பங்குபெற்று பயனடைந்தனர். ஏ.என்.டி கல்வி, மருத்துவம் மற்றும் சமூக மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகத்தினர் மற்றும் சாத்தூர் ஸ்ரீ எஸ். ராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரி கல்லூரி ஆசிரிய பெருமக்கள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Virudhunagar