ஹோம் /விருதுநகர் /

சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா துவக்கம்

சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா துவக்கம்

விருதுநகர்

விருதுநகர்

Brahmotsava Festival Started at Srinivasa Perumal Temple | விருதுநகர்  மாவட்டம் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Virudhunagar, India

விருதுநகர் மாவட்டம் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விருதுநகர் மாவட்டம் ராமர் கோவில் வளாகத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புனித தினமான புரட்டாசி மாதம் திருவோண நட்சத்திரத்தை முக்கியமாக கொண்டு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா கொண்டாடப்படுகிறது.

இதையும் படிங்க ; சதுரகிரி யாத்திரை - சுந்தர மகாலிங்கத்தை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டம்

பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரம்மோற்சவ விழா முக்கியமானதாகும். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்துகொள்வதும் வழக்கம்.

இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழாவையொட்டி கடந்த 26ம் தேதி காலை 7 மணிக்கு பகவத் பிரார்த்தனை, புண்யாக வாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி நடந்தது. தொடர்ந்த 27ம் தேதி காலை 10.35 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. பின்னர் இரவு அன்ன வாகனத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், இரவு ஹனுமந்த வாகனத்திலும், இரவு கருட சேவையும், அடுத்த இரவு சேஷ வாகனத்திலும், இரவு யானை வாகனத்திலும் சுவாமி வலம் வந்தார்.

இதையும் படிங்க ;   ராஜபாளையம் நாயின் சிறப்புகள் என்ன? அதை எப்படி அடையாளம் காண்பது?

இந்த திருவிழாவை முன்னிட்டு பெருமாள் அன்னம், யானை, சந்திர பிரபை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஸ்ரீதேவி- பூதேவியுடன் எழுந்தருளி அருள் பாலித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் வரும் அக்டோபர் 5ம் தேதி நடைபெறுகிறது.

இதையொட்டி அன்று காலை 7 மணிக்கு செல்வர் புறப்பாடும், மாலை 6 மணிக்கு ஸ்ரீபெருமாள் உபய நாச்சியாருடன் திருக்கல்யாண எழுந் தருளல், 6.30 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும் நடக்கிறது. இரவு 9.30 மணிக்கு புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடாகிறார்.

புறப்பாடு, பல்லக்கு புறப்பாடு நடக்கிறது. சுவாமி வெண்ணை தாழி கிருஷ்ணன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 7 மணிக்கு குதிரை வாகனத்தில் சுவாமி எழுந்தருகிறார்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாட்டினை பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Virudhunagar